ஞாயிறு எஞ்ஞான்றும் ஒருபடித்தாக ஆகாயத்தை விளக்கும். ஆடை குலமகட்கு அணியினும் இன்றியமையாதது. கற்புடையாள் கணவன் கற்பித்தவழி நிற்றல் உடையாள். சிறப்புப் பாயிரம் பெயர் மாத்திரையே உணர்த்தலின் வளர்தலும் தேய்தலும் இன்றி எஞ்ஞான்றும் ஒருபடித்தாக நூலினை விளக்கும்; பொதுப் பாயிரம் பிரிந்து நிற்பினும் தான் பிரியாது நூலொடு கூடிநிற்கும்; அந்நூலின் குறிப்பின்வண்ணம்தான் ஒழுகும் இனி முன்னோர் கூறிய இவ்வுவமத்து இயல்பு உணராது நன்னூலார் 1மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க்கு அணியும்போல நூற்கு அணிந்துரை யாவதே பாயிரம் எனக் கூறினார். அது பொருந்தாது. என்னை? பாயிரத்தின் பயன் அணி செயல் ஒன்றேயாயின் சித்திரம் இல்வழியும் மாடமெனவும், கோபுரம் இல்வழியும் நகரெனவும் அணி இல்வழியும் நல்லாரெனவும் கூறின் இழுக்கின்று ஆயினாற் போலப் பாயிரம் இல்வழியும் பனுவலாம் எனப்பட்டு நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்றாதலை உணர்த்தாமல் ‘பாயிர மில்லது பனுவ லன்னே’ என்ற முன்னோர் கருத்தோடு முரணும் ஆதலின் என்பது. இனிப் பொதுப்பாயிரந்தான் நான்கு வகைப்படும்; ஈவோன் தன்மையும் ஈதல் இயற்கையும் கொள்வோன் தன்மையும் கோடல் மரபுமென. என்னை? 2“ஈவோன் றன்மை யீத லியற்கை கொள்வோன் றன்மை கோடன் மரபென வீரிரண் டென்ப பொதுவி 3னியற்கை.’’ |
என்ப ஆகலின். ‘ஈவோன் தன்மை’ என்பது, ஆசிரியனது தன்மை என்றவாறு. அஃதாவது, ஈதல்தொழில் நடைபெற வேண்டின், இரப்போர் வேண்டும் பொருளுடையனாம் தன்மையும், அதனை ஈதற்கு ஏதுவாகிய இரக்கம் முதலிய குணனுடையனாம் தன்மையும் ஈவோனுக்கு
1 | நன்னூல் பொதுப்பாயிரம் 55-வது சூத்திரம். | 2 | இறையனார் களவியலுரை மேற்கோள். | 3 | ‘பொதுவின் றொகையே’ என்பது இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். | |
|