பக்கம் எண் :

264பாயிர விருத்தி

பொருளையாயினும், அவற்கு முற்காலத்து நுதலியபொருளை யாயினும் உணர்த்தும் அன்றி, ஆக்கியோனாகிய அவனையும் அவன் ஆக்கிய நூல் நுதலிய பொருளையும் உணர்த்தாமையான் அதுவும் எல்லையாகாமை அறிதும்; இனி அப்பாயிரத்தை உறுப்பு எனப்பெறு நூலது காலம் எனக் கொள்ளின், அந்நூலை ஆக்கியோன் அந்நூலைக் கேட்போன் என்றாங்கு நுதலிய பொருளும் அந்நூலை நுதலிய பொருள் என விரிந்து அந்நூலை நுதலிய பிறிது ஒரு பொருளை உணர்த்தும் அன்றி, அந்நூல் நுதலிய அதன்பொருளை உணர்த்தாமையான் அதுவும் பொருந்தாமை அறிதும்; இனிப் பாயிரத்தின் காலம் எனக் கொள்ளின் நூல் முற்றிய பின்னரே பாயிரம் செய்தற்கு உடன்படும் காலம் ஆகலான், அக்காலத்திற்கு முற் காலத்தே நூலை ஆக்கியோனையும் முற்காலத்தே நுதலிய பொருளையும் ஆக்கியோன் பெயரும் நுதலிய பொருளும் உணர்த்தியாங்கு, பாயிரம் இல்லது பனுவல் அன்றே என்றமையால் பாயிரம் செய்தற்கு உரியாருள் ஒருவன் இந்நூலைக் குற்றமின்மை ஆராய்ந்து நன்று என அவையோர் கொள்ளின் யான் இந்நூற்குப் பாயிரம் கூறுவல் என உடன்பட்ட பின்னரே குற்றம் இன்மை ஆராயுமாறு கேட்டற்கு அவையோர் உடன்படுப ஆகலான், கேட்போர் என்பதூஉம் அக்காலத்திற்குப் பிற்காலத்தே அவையத்து இருந்து கேட்கும் ஆசிரியரை உணர்த்தும்; இவ்வாற்றான் ஏனைய மூன்றும் எல்லை ஆகாமல் அப்பாயிரம் கூறற்கு உடன்பட்ட காலமே எல்லை ஆதலும் அறிதும் ஆகலின் கேட்போர் என எதிர்காலத்தால் கூறினார் என்பது.

இவ்வாறே மருந்து அளிக்கத் தொடங்கும் காலத்திற்கு நோயுறல் தொழில் முன்னும் அந்நோய் தீர்தலும் உழைச்செல்லலும் பின்னும் நிகழும் முறைபற்றி,

1“உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
 றப்பானாற் கூற்றே மருந்து.’’

என வள்ளுவனாரும் அகப்பொருளின்கண்ணே தலைவன் முதலாயினார் கூற்று முன்னரும் அதனைக் கேட்டல் பின்னரும் எய்தும் முறைபற்றித் 2திணையே கைகோள் கூற்றே கேட்போர் என்று பெருமானடிகளும், 3திணையே கைகோள் கூற்றுவகை எனா


1திருக்குறள் 950.

2களவியல் 56.

3தொல், பொருள் 313.