பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்265

அக்கேட்போர் களனே காலவகை யெனாஅ என்று இவ்வாசிரியனும் கூறுலும் அறிக.

இனிப் பாயிரம் கூறற்கு உடன்பட்ட காலத்தை எல்லையாக்காமல் அவையோர் நூலைக் கேட்டுக் குற்றம் இன்மை ஆராய்ந்த பின்னர்ப் பாயிரம் கூறத்தொடங்கிய காலத்தை எல்லையாக்கின் கேட்டார் எனல் அமையும்; கேட்போர் எனல் அமையாதே எனின் அது பொருந்தாது. என்னை? அஃது எல்லையாயின் அக்காலத்தின் முன்னர் நூல்மாத்திரமே அவையோர் கேட்டல் கூடுமன்றிப் பாயிரம் கேட்டல் கூடாமையின் கேட்டார் என்பது நூல் கேட்டாரையே உணர்த்திப் பாயிரம் கேட்டாரை உணர்த்தாமையானும் அது நூற்கு உறுப்பு ஆகலின் பாயிரமும் நூல்போலவே அவையோரால் கேட்கப்படும் இயல்பு உடைத்து ஆகலானும் என்பது.

இனிப் பாயிரமும் கேட்ட பிற்காலமே எல்லையாம் எனின், ஆய் எண்பொருளும் வாய்ப்பக்காட்டல்வேண்டும் என்பது பாயிரம் கூறத்தொடங்கற்குமுன் கொள்ளப்படும் ஆணை ஆகலின் பாயிரம் கூறி முடிந்தபின் அதனை அவையோர் கேட்ட பிற்காலம் எல்லை ஆதல் இயையாது என்பது.

இனிக் கேட்போர் பாயிரம் கூறாமை என்னை எனின் அவர் கூறின் அப்பாயிரத்தை ஆராய்தற்கு அவர் அறிவு பிரமாணம் ஆகாமையின் அதனையும் கேட்டற்குப் பிறர்வேண்டும் ஆகலின் அவர் கூறார் என்பது.

இத்துணையும் கூறியவாற்றான் ஆக்கியோன் பெயர் நுதலிய பொருள் என்றாற்போல இறந்தகாலத்தால் கூறாமல் கேட்போர் என எதிர்காலத்தால் கூறியதே அவைக்களத்துக் கேட்டோரை உணர்த்தாமல் பாடம் கேட்போரை உணர்த்திற்று எனச் சிவஞானமுனிவர் உரைத்தல் பொருந்தாது என்பதூஉம், முன்னர் நிகழ்தலின் ஆக்கியோன் பெயர் நுதலிய பொருள் என இறந்தகாலத்தால் கூறலும் பின்னர்நிகழ்தலின் கேட்போர் என எதிர்காலத்தால் கூறலும் முறையாம் என்பதூஉம், கேட்போர் என்பது நூல்கற்கும் மாணாக்கரை உணர்த்தாது என்பதூஉம் பெறப்பட்டன.

இனிக் கேட்போர் அவைக்களத்துக் கேட்போர் ஆகார் எனில், சிறப்புப் பாயிரத்துள் பாண்டியன் அவையத்து அதங்கோட்டாசாற்குக் காட்டி என்பது மற்றொன்று விரித்தல் என்னும் குற்றமாக