முடிதலானும், வழக்கும் செய்யுளும் ஆயிரு முடிதலின் என்றதனானே கேட்டற்கு உரியார் பெறப்பட்டது என அவர் கூறல் சிறிதும் ஒவ்வாமை முன்கூறியவாற்றானே உணரப்படும் ஆகலின், கேட்போர்க்கும் யாப்புக்கும் அவர் உரையே பொருந்துமாயின் அவற்றைக் கூறாமை குன்றக்கூறலாம் ஆகலானும், அவர் ஆக்கியோன் பெயர் முதலாய நான்கும் ஐயம் அறுத்தற் பொருட்டன்றி ஒருதலையான் உணர வேண்டாமையான் முன்னரும், யாப்பு முதலாய நான்கும் இன்றியமையாச் சிறப்பின் ஆகலின் இறுதிக் கண்ணும் வைக்கப்பட்டன எனக் கூறினார் ஆகலின், சிறப்பில்லாதனவாக அவர் கூறும் ஆக்கியோன் பெயர் முதலாயவற்றை விதந்து ஓதிய பனம்பாரனார் சிறப்புடையவாக அவர் கூறும் யாப்பையும் கேட்போரையும் விதந்து ஓதாமல் பிறிதொன்றால் பெறவைத்தார் எனல் அவர் கருத்துக்கும் பொருந்தாமையானும், நூல்பெயர் ஆக்கியோன்பெயர் எல்லை வழி இந்நான்கும் அவர் கூறியவாறு நூல் முதல் இடை கடையின் எழுதப்படினும் பிறவாற்றான் அறியப்படினும் பாயிரத்துள் கூறல் இன்றியமையா என்பது முன்னரே கூறினாம் ஆகலானும், இன்னார்காலம் எனக் கூறின் அவர் கேட்டார் என்பதூஉம் இன்னார்களன் எனக் கூறின் அக்களன் கல்விக்களன் அரசர் வினைக்குரிய அமைச்சர் களன் சூதாடு களன் போர்க்களன் முதலாயவற்றுள் இன்னது என்பதூஉம் அறியப்படாமையின் காலம் களத்துள் கேட்டார் அடங்கலான் வேறு கூற வேண்டா என்பது பொருந்தாமையானும், எல்லா ஆசிரியரானும் கொள்ளப்படாத காலம் களத்துள் எல்லா ஆசிரியரானும் கொள்ளப்பட்ட கேட்போர் அடங்கும்எனச் சொல்லலும் கூடாமையானும், ஆக்கியோன் பெயர் முதலாய எட்டு நூல்செய்தார் காலத்தும் நூல் வழங்கும் காலத்தும் ஒப்ப நிகழ்வ என முன்னர்க் கூறிய அவர் தாமே பின்னர் கேட்போர் பெயரும் யாப்பும் அத்தன்மையவாகவும், ஆக்கியோன் பெயர் முதலாயினபோல நூல் வழங்கும் காலத்து நிகழ்வதன்று ஆகலின் அவற்றோடு ஒருங்குவைத்து எண்ணல் பொருந்தா எனக் கூறல் மாறுகொளக் கூறலாம் ஆகலானும், அதிகாரிகளாவரைப் பொதுப் பாயிரத்துள் கூறினமையான் ஈண்டும் கூறல் வேண்டா ஆகலானும், மொழிபெயர்த்தல் ஒழிந்த ஏனைய மூன்றும் முதல்நூற்கும் உண்மையான், அவை வழியுள் அடங்கும் எனல் பொருந்தாமையானும், ஈவோன் தன்மை கொள்வோன் |