இல்லாத ஒருவன் ஐயோ கொண்டுபோயினான்’ எனவும், ‘சிறியதும் நன்னீருடையதும் நன்முகமுடையதும் கரியதும் மனோகர முடையதும் பிராணப் பிரியம் உடையதுமாகிய குண்டிகையை ஒருவன் கொண்டுபோயினான்’ எனவும், இரு பொருள்படக் கூறுமாற்றானும் குண்டிகை குடுக்கை ஆகாமை உணரப்படும் என்பது இனி மலை முதலவாய அவ்வெட்டும் பால்போலும் இன் சொல் என்றாற்போல உவமத்திற்கும் பொருட்கும் பொருந்தும் ஒப்புமைக் குணத்தினை விதந்து 1சுட்டிக்கூறா உவமமாதலின், பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொள்ளாவிடின் அப்பொருள் புலப்பாடின்மையின் அக்குணம் உரைக்கற்பாற்று. இனி அக்குணம் ஈவோரது தன்மை பலவற்றுக்குப் பொதுவாக நிற்றலின் பொது இயல்பு எனவும், அவரது தன்மையுள் ஈதல் வினை என்றற்கே உரிமையாக நிற்றலின் சிறப்பியல்பு எனவும் இரு வகைப்படும். அவற்றுள், பொதுஇயல்பாவது சான்றோரியல்பு எனப்படும் உறுப்புவகை எட்டும் அவற்றுள் முதல் உறுப்பாகிய குடிப் பிறப்பின் வகை எட்டுமாம். சிறப்பியல்பாவது அக்குடிப்பிறப்பின் முதலாவது வகையுள் முதல் குணமாகிய ஈதல்தொழிற்குக் காரணம் எனப்படும் முதனிலைவகை எட்டும் அவற்றின் விகற்பமுமாம். இனிச் சான்றோர் உறுப்பு எட்டென்பது, 2‘எட்டுவகை நுதலிய வவையத் தானும்’ என இவ்வாசிரியன் மேற்கூறுமாற்றான் உணரப்படும். இனி அவ்வுறுப்புக் குடிப்பிறப்பும், தூய்மையும், ஒழுக்கமும், கல்வியும், வாய்மையும், அழுக்காறிலாமையும், அவாவின்மையும் நடுவுநிலையும் என இவை என்னை? “வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும வான்யா றன்ன தூய்மையும் வான்யாறு நிலம்படர்ந் தன்ன நலம்பட ரொழுக்கமுந் திங்க ளன்ன கல்வியுந் திங்களொடு |
1 தொல்காப்பியம் பொருளதிகாரம் 278. 2 தொல்காப்பியம், பொருளதிகாரம் 75 வது சூத்திரம். |