பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்29

ஞாயி றன்ன வாய்மையும் யாவது
மஃகா வன்பும் வெஃகா வுள்ளமுந்
துலைநா வன்ன சமனிலை யுளப்பட
வெண்வகை யுறுப்பின ராகித் திண்ணிதின்
வேளாண் வாழ்க்கையுந் தாளாண் மையு
முலகிய லறிதலு நிலைஇய தோற்றமும்
பொறையு நிறையும் பொச்சாப் பின்மையு
மறிவு முருவு மாற்றலும் புகழுஞ்
சொற்பொரு ளுணர்த்துஞ் சொல்வன் மையுங்
கற்போர் நெஞ்சங் காமுறப் படுதலு
மின்னோ ரன்ன தொன்னெறி மரபினர்
பன்னருஞ் சிறப்பி னல்லா சிரிய
ரறனே பொருட்பய னின்பெனு மூன்றின்
றிறனறி பனுவல் செப்புங் காலை
முன்னர்க் கூறிய வெண்வகை யுறுப்பினு
ளேற்பன வுடைய ராகிப் பாற்படச்
சொல்லிய பொருண்மை சொல்லியாங் குணர்தலுஞ்
சொல்லிய பொருளொடு சூழ்ந்துநன் குணர்தலுஞ்
செய்ந்நன்றி யறிதலுந் தீச்சார் பின்மையு
மடிதடு மாற்ற மானம்பொச் சாப்புக்
கடுநோய் சீற்றங் களவே காம
மென்றிவை யின்மையுஞ் சென்றுவழி படுதலு
மறத்துறை வழாமையுங் குறிப்பறிந் தொழுகலுங்
கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலு
மீட்டவை வினவனும் விடுத்தலு முரைத்தலு
முடைய ராகி நடையறிந் தியலுநர்
நன்மா ணாக்க ரென்ப மண்மிசைத்
தொன்னூற் புலமைத் துணிபுணர் வோரே’’

1என ஆத்திரையன் பேராசிரியன் பொதுப்பாயிரங் கூறினான் ஆகலின் என்பது.

இன்னும்,

“அழுக்கா றிலாமை யவாவின்மை தூய்மை
 யொழுக்கங் குடிப்பிறப்பு வாய்மை- யிழுக்காத

1“வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்,’’ என்னும் பொதுப்பாயிரஞ் செய்தான்ஆத்திரையான் பேராசிரியன். அச்சிட்ட தொல்காப்பியப் பொருளதிகாரம் 654 வது சூத்திரத்து உரையின் இறுதி. 814 வது பக்கம்.

1வீரசோழியம் பொருட்படலம் 19 வது செய்யுளுரை இறுதி 84 வது பக்கம்.