பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்51

இவ்வாற்றான் வேளாளருள் அவ்இருவகையாரது தன்மை உணரப்படும்.

இனி மலையின் ஈகை வேளாளர்க்கும் நிலத்தின் ஈகை அரசர்க்கும் பூவின் ஈகை அந்தணர்க்கும் துலாக்கோலின் ஈகை வணிகர்க்கும் உவமம் ஆதலின், அம்முறையானே வித்தினை முன்னர்ப் பெற்றுப் பின்னர் ஈயும் நிலம்போல இறைப்பொருள் முதலாயின முன்னர்ப் பெற்றுப் பின் ஈயும் அரசர் ஈகையினும் முன்னர் ஒன்றும் பெறாமல் துலாக்கோல்போல ஈயும் வணிகர் ஈகை சிறந்தமையும் முன்னர்ப் பெறாவிடினும் பிறர்மாட்டுப் பெற்ற ஊதியப் பொருளன்றி முதற்பொருள் ஈயாத அவர் ஈகையினும் உள்ளன முற்றக் கொடுக்கும் அந்தணர் ஈகை சிறந்தமையும், உள்ளன முற்றக் கொடுப்பினும் சிறிதளவினவாதலும் உறுப்பினை ஈயாமையும் உடைய அவர் ஈகையினும் உடலும் பொருளும் உணவும் ஒருங்கே வேண்டினும் வரையாது முற்றக் கொடுக்கும் வேளாளர் ஈகை சிறந்தமையும் உணரப்படும். உடல் கொடுப்போர் வேளாளரே ஆதலின் அவரே உயிரும் கொடுப்போர் என்பது போதரும். இவ்வாறே ஓதலினும் வேட்டலினும் வேறுபாடு மேற்கூறிய வாற்றான் உணர்க.

இனி உயிர்க்கொடை வேளாளர்க்கே உரிமையும் ஏனையோர்க்கு அங்ஙனம் ஆகாமையும் என்னை எனின், அந்தணன் அறநெறியினை உலகிற்கு உணர்த்துவோன் ஆதலானும், அரசன் உலகினைப் புரப்போன் ஆகலானும், வணிகன் அவ்வரசனுக்கும் படைக்கும் வேண்டுவன வாணிகமுறையில் கொணர்ந்து அளிப்போன் ஆதலானும், அவர் உயிர் துறப்பின் அவரனைய நூல்வல்லாரும் நீதிவல்லாரும் வாணிகம்வல்லாரும் பிறரில்வழி, உலகிற்குப் பெருந்தீங்கு பயத்தலின் அவர் ஒருதலையாக உயிர்க் கொடைக்கு உரியரல்லர். வேளாளர் உயிர் துறப்பின் அவர் புதல்வர் முதலாய சுற்றத்தார் நெடுநாள் பழக்கம் வேண்டாமையே உழவு நடாத்துவார் ஆதலின் உலகிற்குத் தீங்கு இன்மையான் அக்கொடை அவர்க்கே உரிமை யாயிற்று என்பது.

இனி ஒருவர்க்குச் சிறப்பும் பிறர்க்குப் பொதுவுமாய ஒன்றனை உலகிற்குக் கேடு பயவாவழிப் பிறரும் சிறப்பாக்கிக் கொள்ளின் இழுக்கின்றது. அதனை நான்மறை முற்றிய ஞான உருவினனாகிய ததீசி, வானவர் வேந்தன் மேன்மை எய்த முதுகு என்பு அளித்த சிதையா அறவினையால் தெளிக.