அப்பனை வெய்யில் பொறாமல் ஓலையால் மறைத்துக் கோடலும் மழை பெறாமல் பாளை கருகுதலும் உடைத்து. கடற்கரை முதலாய மணற்பாங்கமைந்த இடம் வரையறுத்தலும் மணல்மேல் இருக்கையென ஆசனம் வரையறுத்தலும் உடைத்து. இதனைப் 1பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை, யன்றி லகவு மாங்கட், சிறுகுர னெய்தலம் பெருங்கழி நாட்டே, என்பதனான் அறிக. அத்தெங்கு, நிலத்தன்றி நீரினும் கோட்டினும் காட்டினும் நில்லாமையானும் நிலன் அன்றிப் பிறிதோர் ஆசனம் இன்மையானும் அவற்றை இன்று. அது பிறந்தக்கால் தொட்டுப் பிறதெங்கினது நெருக்கத்தால் காற்றினும் ஒலியாமையின் வாய் வாளாமை உடைத்து. அப்பருத்தி பெய்தற்கண்ணும் எடுத்தற்கண்ணும் முன்னும் பின்னும் இடையினும் சிறார் உரையாடலின் அத்தன்மை இன்று. இவ்வாற்றானே தவம் புரிவாருள் அவ்இருவகையாரது தன்மை உணரப்படும் இனி யோகியின் இயல்பு என்னை எனின், இயமமும் நியமமும் இருக்கையும் வளி நிலையும் தொகைநிலையும் நிறையும் நினைவும் சமாதியும் என நாலிரு வழக்கின் தாபதப் பக்கம் என்பது, என்னை? 2“இயம நியமமே யெண்ணிலா வாதன நயமுறு பிராணாயாம நன்பிரத்தி யாகாரஞ் சயமிகு தாரணை தியானஞ் சமாதி பயமிறு மட்டாங்க மாவது மாமே.’’ |
என்றார் ஆகலின். இருக்கை என்பது ஆதனம். வளிநிலை என்பது பிராணயாமம். தொகைநிலை என்பது பிரத்தியாகாரம், நிறை என்பது தாரணை. நினைவு என்பது தியானம். இனி, 3“பொய்கொலை களவே காமம் பொருணசை யிவ்வகை யைந்து மடக்கிய தியமம்.’’ |
எனவும்,
1தொல் பொருளதிகாரம் 17 வது பக்கம், 9 வது வரி. 2திருமூலர் திருமந்திரம் 552. 3தொல், பொருளதிகாரம் 165 வது பக்கத்திலிருந்து 166 வது பக்கத்துள்ள மேற்கோள் சூத்திரங்கள் |