பக்கம் எண் :

பாயிர விருத்தி54

1“பெற்றதற் குவத்தல் பிழம்புநனி யுலர்த்தல்
 கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை
 பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு
 நயனுடை மரபி னியம மைந்தே.’’

எனவும்,

2“நிற்ற லிருத்தல் கிடத்த னடத்தலென்
 றொத்த நான்கி னொல்கா நிலைமையோ
 டின்பம் பயக்குஞ் சமமே முதலிய
 வந்தமில் சிறப்பி னாதன மாகும்.’’

எனவும்,

3“உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந்
  தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை.’’

எனவும்,

4“பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம
  லொருவழிப் படுப்பது தொகைநிலைப் புறனே.’’

எனவும்,

5“மனத்தினை யொருவழி நிறுப்பது நிறையே.’’

எனவும்,

6“நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற்
 குறித்த பொருளொடு கொளுத்த னினைவே.’’

எனவும்,

7“ஆங்கனங் குறித்த வம்முதற் பொருளொடு
  தான்பிற னாகாத் தகையது சமாதி.’’

எனவும் கூறுமாற்றான் அவ்எட்டும் உணரப்படும்.

இனி இயமத்துள் பொய் என்பது, 8தன்னெஞ் சறிவது பொய்த்தல். கொலை என்பது, 9உயிர்க்குறுகண் செய்தல், களவு


1,2,3,4,5,6,7 இவை, தொல்காப்பியம் பொருளதிகாரம் 165-வது பக்கத்திலிருந்து 166-வது பக்கத்துள்ள மேற்கோள் சூத்திரங்கள்.

8திருக்குறள் 293  9திருக்குறள் 261.