பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்55

என்பது,1பிறன்பொருளைக் கள்ளத்தாற் கொள்வேம் எனக் கருதுதல். காமம் என்பது, 2தவமறைந் தல்லவை செயலாகிய கூடாஒழுக்கம். பொருள்நசை என்பது, 3நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவாண்மை.

இனி நியமத்துள் பெற்றதற்கு உவத்தல் என்பது,
4“ஒரு பொழுதும் வாழ்வ தறியார் கருதுப
 கோடியு மல்ல பல.’’

என்றார் ஆகலின் அங்ஙனம் கருதலின்றி,

5“பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
 சொரியினும் போகா தம.’’

என்றார் ஆகலின் அவ்வாறு கருதித் தான் அடைந்தவற்று உவத்தல். பிழம்புநனி உலர்த்தல் என்பது, நூல் சொல்லியவாறு கிருச்சிர சாந்திராயணம் முதலாய விரதங்களான் உடலை உலர்த்தி 6உற்றநோய் நோன்று தவம் செயல். கற்பன கற்றல் என்பது, 7கற்றீண்டு மெய்ப் பொருள் கண்டு, அதனை 8ஓர்த்துள்ள முள்ள துணரல். அஃது அனுபவமுடைய தேசிகர்பால் உபதேச மொழிகளைக் கேட்டலும் விமரிசமும் பாவனையும் என மூவகைத்து. கழிகடுந் தூய்மை என்பது,

9“தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
  வாஅய்மை வேண்ட வரும்.’’

எனவும்,

10“புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
  வாய்மையாற் காணப் படும்.’’

1திருக்குறள்- 282

2திருக்குறள்- 274

3திருக்குறள்- 331

4திருக்குறள்- 337

5திருக்குறள்- 376

6திருக்குறள்- 261

7திருக்குறள்- 356

8திருக்குறள்- 357

9திருக்குறள்- 364

10திருக்குறள்- 298