எனவும் கூறினார். ஆகலின் மண் முதலானவற்றால் நீரில் புறமாக இன்றாக உடலை மண்ணலும், ஆசை இன்மை எனும் மண்ணாலரிய வாய்மைப் புனலில்வினை, மாசின்றாக உள்ளத்தை மண்ணலும் செய்தலான் வருவது, இனி ஆசனம் என்பது, சமம் முதலாய பல்வகைத்து. என்னை? 1“பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி சொத்திகை வீரஞ் சுகாதன மோரேழு முத்தம மாமுது வாசன மெட்டெட்டுப் பத்தொடு நூறு பலவா சனமே.’’ |
என்றார் ஆகலின். அவற்றுள் சிலர் பதுமம் சொத்திகை முதலாயவற்றை முதன்மையாகவும் சிலர் சித்தாதனத்தை முதன்மையாகவும் சிலர் வேறுபிற ஆதனங்களை முதன்மையாகவும் கூறுவர். கலசயோனியாகிய ஆசிரியன் அகத்தியன் முதலாயினாார் சமாதனத்தையே முதன்மையாகக் கொண்டார். சமாதானம் என்பது, நிற்றலும் இருத்தலும் கிடத்தலும் நடத்தலும் என நால்வகை நிலையுள் ஒன்றுபற்றி, நிலத்தினும் நீரினும் ஒப்ப இருத்தல், ஏனைய ஆதனங்களை முடிந்த நூல்கொண்டு உணர்க. இனி வளிநிலை என்பது, பிராணன் அபானன் என்னும் இருவகை வளியினையும் ஆயாமம் செய்து நிறுத்தல். இனித் தொகைநிலை என்பது, ஐம்புலனும் புறமாக இடபத்தின் இயன்றிடாமல் தடுத்தற்பொருட்டு முறையானே நால்வகை நிலையுட்படுத்து மனத்தை ஒருக்கல். இனி நிறை என்பது என்னை எனின்,
1மந்திரம் 546 |