பூ, பிறர் அறியாவண்ணம் யாதாயினும் கோடல் இன்மையின் களவு இன்று. இசை கற்று வல்ல கணவனாகிய தும்பியுடன் இதழாகிய சேக்கையுள் பிறர் காணாவண்ணம், புணர்ச்சி கோடலின் காமமும், தன்னொடு நில்லாது உதிர்தற்பாலவாய மகரந்தம் எனும் பொருளை நிலையின என்று கொண்டு, தன்னகத்து வைத்தலின் பொருள் நசையும் உடைத்து. துலாக்கோல், பிறர் காணுமாறு பொருளைத் தூக்கி நிற்றலின் அது நட்பின் புணர்ச்சி ஆதலன்றிக் காமப் புணர்ச்சி ஆகாமையானும், தூக்கியபின்னர் அப்பொருளைப் பற்றற ஒழித்தலான் அதனை அளத்தற்பொருட்டுத் தன்னகத்துள் கொண்டமையும் பொருள் நசையால் கொள்ளாமையும் காணப்படுதலானும், அவற்றை இன்று. அக்குடம், 1“கழற்காய் விதைக்குக் கனவண்ட வாதந் தழற்பக்கச் சூலைகுன்மஞ் சாந்தி.’’ |
எனப் பிடக நூல் கூறிற்று ஆகலின், அப்பிணி தீர்க்கும் கழற் பருப்பினை வெளிக்காட்டாமல் அகத்தே மறைத்தலின் பொய்யுடைத்து. தனக்கென ஒரு வினை இன்மையின் கொலை இன்று. அப்பனை, கள் அளித்து அறிவினைக் கொன்று உயிர்க்கு உறுகண் செயலின் கொலை உடைத்து. பிறர் பொருளை அவர் அறியாமல் வௌவுதல் இன்மையின் களவு இன்று. அத்தெங்கு, தான் பாளை ஈனாமை பற்றி, வளர்ப்போர் வெறுத்துப் பிற தெங்கிற்கே நீர் பாய்ச்ச, அந்நீரினை அவர் அறியாமல் வேரின் வழியால் உண்ணலின் களவு உடைத்து. தன் மருங்கு உற்றாரொடு பிறர் காணுமாறு நட்பின் புணர்ச்சி உடைத்தன்றிப் பிறர் காணாக் காமப் புணர்ச்சி இன்மையின் காமமும், ஓலையும் ஈர்க்கு முதலாய பொருளைப் பிறர் கோடல் இல்வழியும் அவை நில்லாதன என நினைந்து ஊழ்த்தலின் பொருள் நசையும் இன்று. அப்பருத்தி, பஞ்சினைப் பிறர் காணாவகை அகத்துள் கொண்டு புணர்தலின் காமமும், அதனை நில்லாதென்று நினையாமல்
1தேரையர் பதார்த்தகுண சிந்தாமணி |