பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்59

தோலாகிய பேழையுள் பெய்துவைத்துக் காத்தலின் பொருள்நசையும் உடைத்து.

இவ்வாற்றான இயமமும் இயமம்இன்மையும் பெறப்பட்டன.

இனி மலை, எருவும் நீரும் உழவர் குறையக் கொடுப்பின் உவவாமல் புலக்கும் நிலம்போலன்றி, வெறியாட்டாளர் ஊணும் நீரும் குறையக் கொடுப்பினும் மிகக் கொடுப்பினும் உவத்தலின் பெற்றதற்கு உவத்தல் உடைத்து. ஈண்டு மலைத் தெய்வமாகிய சேயோனுக்குப் பலியிடல் குறித்து உவத்தல் கூறப்பட்டது. எஞ்ஞான்றும் ஊணும் நீரும் குறைவற உடைமையின் பிழம்பு நனி உலர்த்தல் இன்று.

நிலன், விளைவின் பின்னர் ஊணும் நீரும் இன்றிப் பன்னாள் கிடத்தலின் பிழம்பு நனிஉலர்த்தல் உடைத்து. உழவரது கடா இடை செலுத்தும் ஓசை அன்றி மறைமொழியாகிய உபதேசம் கேட்டல் இன்மையின் கற்பன கற்றல் இன்று.

பூ, அதன் இதழகத்துத் தும்பியின் முகம் ஒன்றல் உபதேசம் கேட்டலைக் குறித்தலின் கற்பன கற்றல் உடைத்து. அகத்துள்ள தேனை வெளிக்காட்டாது மறைத்தலின் வாய்மை இன்மையான் அகம் தூய்மை இன்று. தன்னைத் தாங்கி நிற்கும் முதற்பொருள் அன்றித் தான் நீராடாமையின் புறந் தூய்மை இன்று. தன் பயனாகிய தேனைத் தன்னைத் தாங்கிய கொடி முதலாயவற்றுக்கு அளியாமையின் பூசனைப் பெரும்பயன் ஆசாற்கு அளித்தல் இன்று.

துலாக்கோல், நிறைகாட்டும் வாய்மை உடைமையான் அகந் தூய்மையும், அதனை நாடொறும் நீரில் கழீஇத் தூய்தாக்குவர் ஆதலின் புறந் தூய்மையும், தூக்கிய பொருளான் வந்த ஊதியத்தைத் தன்னைத் தாங்கிய வணிகற்கே அளித்தலின் பூசனைப்பெரும்பயன் ஆசாற்கு அளித்தலும் உடைத்து.

அக்குடம், கழற்காயினைக் குறையப் பெய்யின் குறைவுகாட்டலானும் மிகப் பெய்யின் ஏலாமையானும் பெற்றதற்கு உவத்தல் இன்று. ஊணும் நீரும் இன்மையின் பிழம்பு நனி உலர்த்தல் உடைத்து.

அப்பனை, கள்ளினைப் பாளையாகிய வாயினால் காலுதலின் அதனை மிக உண்டு வமனமுறல் காட்டும் ஆகலான் உணவு ஒழிந்து