பக்கம் எண் :

60பாயிர விருத்தி

பிழம்பு நனி உலர்த்தல் இன்று. சான்றாரது முகம் கள் விளைக்கும் காலை அதன் முகத்தொடு பொருந்தல் உபதேசம் கேட்டலைக் குறித்தலின் கற்பன கற்றல் உடைத்து.

அத்தெங்கு, கள்ளாயினும் காயாயினும் அளியாமையின் அதன் செவிக்கண் மனிச்சர் முகம். ஒன்றாமையால் கற்பன கற்றல் இன்று. நீர் பலகால் மூழ்கலானும் தன்பால் உள்ளவற்றை மறையாது வெளிக்காட்டலானும் இருவகைத் தூய்மையும் உடைத்து. தன் பயனாகிய ஓலையைப் பனைபோலத் தான் வைத்துக்கோடல் இன்றிப் பழுத்தவுடன் ஊழ்த்துத் தன்னைத் தாங்கிய நிலத்துக்கு அளித்தலின் ஆசாற்கு அளித்தல் உடைத்து.

அப்பருத்தி, நீருள் கிடப்பினும் தன் பசியநிறம் குன்றி அழுக்குப் படிதலின் புறமாசு நீங்காமையானும் அகத்துள்ள பஞ்சினை மறைத்தலானும் இருவகைத் தூய்மையும் இன்று. தன் பயனாகிய பஞ்சினைத் தன்னைத் தாங்கிய நீரினுக்கு அளியாது சிறார்க்கு அளித்தலின் ஆசாற்கு அளித்தல் இன்று.

இவ்வாற்றானே நியமமும் நியமம் இன்மையும் பெறப்பட்டன.

இனி மலை, நிற்றலாய நிலையினை நிலத்தினும் நீரினும் ஒப்பக் கோடலின் அவ்வாதனம் உடைத்து. குமரி மைநாகம் முதலாயின கடலில் உண்மையின் மலை நிலத்தன்றி நீரினும் நிற்றல் உணரப்படும், நிலன் இருத்தலாகிய நிலையினை அவ்வாறு கோடலின் ஆதனம் உடைத்து. பூக் கிடந்த நிலையினை அவ்வாறு கோடலின் ஆதனமுடைத்து. துலாக்கோல் நடத்தலாகிய நிலையினை நிறுக்குங்காலைக் கோடலின் அவ்வாதானம் உடைத்து.

அக்குடம் ஒருநிலையேனும் கொள்ளாமல் சிறார் குறித்து வைக்கும் நிலையினைக் கோடலின் ஆதனம் இன்று அப்பனை மணல் பரப்பின் அல்லது நீரில் நில்லாமையின் ஆண்டு மொத்த ஆதனம் கோடல் இன்று. அத்தெங்கு நீர்வளம் மிக்க நிலத்தன்றிப் பிறிதிடத்து நில்லாமையின் ஆதனமின்று. அப்பருத்தி நீர்மேலன்றி நிலத்தில் கிடப்பின் வெடித்தலின் ஆதனம் இன்று.

இவ்வாற்றான் ஆதனமும் ஆதனமின்மையும் பெறப்பட்டன.