இனித் தொகைநிலைவகை என்னை எனின்? மனத்தைப் புலன்வழிப் போக்காது நாபிக்குப்பின் பன்னிரண்டு அங்குலத்தின்கீழ் நிறுத்தலும் நாபிக்கு நால் விரற்கீழ் நிறுத்தலும் நாசிக் கதோமுகமாகப் பன்னிரண்டு அங்குலத்தில் நிறுத்தலும் கீழ்வாயிலைத் தாழிட்டு மூடி மேல்வாயிலாகிய பிரமரந்திரத்தில் நிறுத்திக் கண்விழித்து இருத்தலுமென இவை, என்னை? 1“நாபிக்குங் கீழே பன்னிரண் டங்குலந் தாபிக்கு மந்திரந் தன்னை யறிகிலர் தாபிக்கு மந்திரந் தன்னை யறிந்தபின் கூவிக்கொண் டீசன் குடிபுகுந் தானே.’’ |
எனவும், 2“மூலத் திருவிரன் மேலுக்கு முன்னின்ற பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற கோலித்த குண்டலி யுள்ளே செழுஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழே.’’ |
எனவும், 3“நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குல நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேன் மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்துந் தேகத்திற் கென்றுஞ் சிதைவில்லை யாகுமே.’’ |
எனவும், 4“மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு மேலைத் துவாரத்தின் மேன்மனம் வைத்திரு வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு காலத்தை வெல்லுங் கருத்தது தானே.’’ |
எனவும் திருமந்திரம் கூறிற்று ஆதலின். இனி மாலைக்குச் சிகரமே பிரமரந்திரமும் அடிப்பரப்பே நாபியும் நிலத்தின் கீழ் ஊன்றிய வேரே மூலத் துவாரமாகவும் முடிதலானும் நாபியின்கீழ் மூலத்துவாரத்து அளவாய பன்னிரண்டு அங்குல நாபியின்மேல் பிரமரந்திரத்து அளவாய முப்பத்தாறு அங்குலத்தின் மூன்றிலொரு பகுதி ஆகுதலானும், சிகரத்திருந்து
1திருமந்திரம் 579 2திருமந்திரம் 580 3திருமந்திரம் 581 4திருமந்திரம் 583 |