பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்65

நிலத்தின் வரையுள்ள உயரத்து அளவுள் மூன்றில் ஒரு பகுதியின் கீழாக நிலத்தின்கீழ் வேரூன்றி நிற்கும் காரணத்தால் சாயாது நிற்றலானும், அம்மலை நாபியின்கீழப் பன்னிரண்டு அங்குலத்தில் தன்னைத் தாபித்தலின் அத்தொகைநிலை உடைத்து. தன்னை நாபியின்கீழ்ப் பன்னிரண்டு அங்குலத்தில் தாபிக்கும் முதலாவது நிலை உடைத்தன்றி நான்கு அங்குலத்தின் கீழ்த் தாபிக்கும் இரண்டாவது தொகைநிலை இன்று.

நிலத்துக்கு வரம்பே பிரமரந்திரமும் அடிப்பரப்பே நாபியும் அவ்விரண்டற்கும் நடுவாகிய வெளியே நாசிக் கதோமுகம் பன்னிரண்டு அங்குலத்து உள்ளது எனப்பட்ட உள்ளக் கமலமுமாக முடிதலானும், நெற்பயிரினை நாபிக்கு நால்விரற்கீழ்த் தாங்கலன்றி உள்ளக் கமலத்தில் தாங்காமையானும் அந்நிலையின் இரண்டாவது நிலையுடைத்து, மூன்றாவதுநிலை இன்று.

பூவிற்கு உள்ளம் எனப்படுவது காம்பின் மேலும் அக இதழின் கீழுமாய இடமே ஆதலானும் அவ்விடத்தே தேனைத் தொகுத்தலானும் பூ மூன்றாவது நிலையினை உடைத்து. மூலத்துவாரமாகிய காம்பின் வாயை மூடாமையானும் மேலைத் துவாரமாகிய முகம் மலர்ந்து திறத்தலின் அதனைத் திறவாது நோக்குதல் இன்மையானும் நான்காவது நிலையின்று.

துலாக்கோலுக்கு மேலுள்ளவாய நிறைதெரிக்கும் வரைகளே பிரமரந்திரமும் பொருளைத் தாங்கும் தூக்கே மூலமாகவும் முடிதலானும், நிறுக்குங்காலை மூலமாகிய தூக்கின்கண் சிறு துவாரங்கள் இருப்பினும் தூக்கியபொருள் வழுவாமையின் மூலத் துவாரத்தை முக்காரம் இட்டமை பெறப்படலானும், தூக்கில் பொருளை மேலுள்ள வரையுடன் ஒப்பித்து நோக்கப்படுதலின் மேலைத் துவாரத்தின்மேல் மனம்வைத்தல் பெறப்படலானும், தூக்கின் பக்கல் உள்ள தூங்கு கயிறுகள் அத்தூக்கினுள்ள பொருளை மறையாமையின் கண்விழித்திருத்தல் பெறப்படுதலானும் நான்காவது நிலை உடைத்து.

இனி அக்குடத்தினைச் சமநிலையுடைய நிலத்து வைப்பின் சாயும் ஆதலின் சிறார் ஒருவிரல் இருவிரல் மூன்றுவிரல் நான்குவிரல் ஆழத்தில் குழிதொட்டுத் தாபித்தல் அன்றிப் பன்னிரண்டு அங்குலத்து அளவில் தாபியாமையின் முதலாவதுநிலை இன்று. இரண்டாவது நிலை உடைத்து.