மஞ்சி னுகிரு மெயிறு மறுத்திட்டா லெஞ்சா திறைவனை யெய்தலு மாமே.’’ |
எனவும் கூறினார் ஆகலின். இனி மலை, வளர்தலும் தீ இடில் பிளத்தலும் உடைத்து ஆதலின் ஐம்பொறியுள் மெய்ப்பொறியும் ஐம்புலனுள் ஊறும் உடைத்து என்று காட்டலானும் குளிரினும் உடல் பனியாது ஆடையை அவாவாமை யானும் மெய்யடக்கம் உடைத்து. ஒருவன் கூய் அழைத்த வழித் தானும் எதிரொலித்து உரையாடலின் நாவும் வாயும் உடைத்தென்று காட்டலானும், 1“யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.’’ |
என்றார் ஆகலின், அங்ஙனம் நா காவாமையைத் தன்னைக் கூய் அழைத்தாராது மொழியினைச் சிறுபான்மை ஒத்துப் பெரும்பான்மை சிதைந்து சொல் இழுக்குப்படும் அவ்எதிரொலியால் காட்டுதலானும், 2“கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉ மையந் தரும்.’’ |
என்றார் ஆகலின், அங்ஙனம் கல்லாத மேற்கொண்டொழுகித் தான் எதிரொலித்தலால், தனக்கு இயல்பான் அமைந்த அருவி ஒலிக் கண்ணும் அவ்வொலி மேகம் முதலானவற்றான் உளதாய எதிரொலியோ என்று ஐயப்படற்குத்தான் ஏதுவாக முடிதலானும் நாவடக்கம் இன்று. தான் மழை வளத்தான் உடல் கொழுத்தகாலைச் சுவை விரும்பாதாயினும் வேனிலான் உடல் காய்ந்தகாலை இன்சுவைய வாகிய நீராயினும் தேனாயினும் மிகப்பெய்தவழி வாய் பிளத்தலான் நாவடக்கம் இன்று. முன்னர் மலை ஊண் நசையை இன்று எனக் கூறினமையான் ஈண்டு வாய் அடக்கம் இன்று என்பது மாறுடைத்து ஆகாதே எனின், ஆண்டு உண்டி சுருக்கும் விரதம் குறித்துக் கூறியது அன்றிச் சுவை வெஃகும் அவா அடக்கல் பெறப்படாமையின் மாறு ஆகாது என்பது. பிறாண்டும் இவ்வாறே வேறுபாடு உய்த்து உணரப்படும். இனி நிலன், ஒலித்தல் இன்மையானும் பல்வேறு சுவையினவாய எருவும் தழையும் இடினும் வாய் திறவாமையானும்
1திருக்குறள் 127. 2திருக்குறள் 845. |