அப்பருத்தி, குண்டிகை நீர் நன்மணம் உடைத்தாமளவும் பசுமை காட்டலானும், அந்நீர் காலம் செல்லின் தீயநாற்றமுறும் ஆதலின் அக்காலைத் தான்பசுமை மாறி வெம்பலானும் மூக்கினை அடக்கல் இன்று. காற்று ஒலியின் மலர்தலும் மழை ஒலியில் கூம்பலும் உடைமையின் செவி அடக்கம் இன்று. இவ்வாற்றான் ஐந்து அடக்கலாகிய நிறையும், நிறை இன்மையும் பெறப்பட்டன. இனித் தியானமாகிய நினைவின் முறையுள்ளும் அதன்பின்னர் எய்தும் சமாதி முறையுள்ளும் உபதேச முறையில் கேட்கற்பால பெரும்பாலன ஆதலின் அவற்றை உவமத்தானும் கூறல் கூடாமையின், ஒருவகையால் மனம் நின்ற இட விகற்பம்பற்றித் தியானமும் தியானத்தால் குறித்த பொருளொடு வேற்றுமையின்றி ஒன்றுபட்டிருத்தலே சமாதி ஆதலின், அத் தியானத்தொடு சமாதியும் உரைக்கப்படும். இனித் தியானம் என்பது சகுணநிற்குணம்பற்றியும் சகற்ப மகற்பம் பற்றியும் அளவிறந்த பேதம் உறுமாயினும், மனம் நினிற நிலையாகிய கண்ணும் மூக்கும் செவியும் நாவும் என அந்நான்கு இடம்பற்றி நால்வகைப்படும். என்னை? 1“கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட் பண்ணாக்கி நின்ற பழம்பொரு ளொன்றுண்டு.’’ |
என்றார் ஆகலின். இனிக் கண்ணில் குறிக்கும் தியானம் என்னை எனின்: 2“ஒண்ணா நயனத்தி லுற்ற வொளிதன்னைக் கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில் விண்ணாறு வந்து வெளிகண்டிட வோடிப் பண்ணாம னின்றது பார்க்கலு மாமே.’’ |
என்பதனன் அறிக.
1திருமந்திரம் 599 2திருமந்திரம் 60 |