பக்கம் எண் :

70பாயிர விருத்தி<

இனி மலை விண்ஆறுபோல வெளிகண்டிட ஓடும் அருவிநீர் உடைமையான் அக்காட்சி, நயனத்து ஒளி பார்த்துக் கலந்து அங்கு இருந்திடுதலைக் குறிப்பித்தலின் அத்தியானம் உடைத்து. ஆங்கனம் கண்ணில் குறித்த பொருளொடு தான் பிறனாகாது மனம் ஒடுங்கின் அதுவே சமாதியாம்.

அக்குடத்தில் விண்ணாறு காணப்படாமையின் அது தியானமும் சமாதியும் இன்று.

1“நாட்ட மிரண்டு நடுமூக்கில் வைத்திடில்
 வாட்டமு மில்லை மனைக்கு மழிவில்லை
 யோட்டமு மில்லை யுணர்வில்லை தானில்லை
 தேட்டமு மில்லை சிவனவ னாமே.’’

என்பதனான் அறிக.

இனி ஒரு நிலத்திற்கே போதிய நீர் வாய்க்கால்வழி ஓடினக் காலை நீர் பாய்ச்சுவார் அந்நிலத்தின் மடைக் கண்ணைச் சிறிதுதிறந்து கால் வாயின்மேலாக மூக்குப்போல அணைகோலி அடைத்து வைப்பின், பயிர்க்கு வாட்டமும் அழிவும் நீரோட்டமும் தேட்டமும் இன்றிச் செழித்தலான் நிலன் அத்தியானம் உடைமை உணரப்படும். ஆங்கனம் நடுமூக்கில் குறித்த பொருளொடு தான் பிறனாகாது மனம் ஒடுங்கினதுவே சமாதியாம்.

இனி ஓலை வற்றி வாடுதலின், அப்பனை அத்தியானமும் சமாதியும் இன்று என்று அனுமிக்கப்படும்.

இனிச் செவியில் குறிக்கும் தியானம் என்னை எனின்,

2“மணிக்கடல் யானை வளர்குழன் மேக
 மணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ்
 தணிந்தெழு நாதங்க டாமிவை பத்தும்
 பணிந்தவர்க் கல்லது பார்க்கவொண் ணாதே.’’

எனவும்,


1திருமந்திரம் 604

2திருமந்திரம் 606