1“ஓடிச்சென் றங்கே யொருபொருள் கண்டவர் நாடியி னுள்ளதாக நாகு மெழுப்புவர் தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு பாடியு ணின்ற பகைவரைக் கட்டுமே.’’ |
எனவும் கூறுமாற்றான் அறிக. இனிப் பூ, தேடிச்சென்ற அங்கே தேனை முகந்துண்டு பாடி உள் நின்ற பகையாகிய தும்பியைக் கட்டலானும் தன் செவியாகிய மேலிதழகத்துக் கேட்குமாறு வண்டினது நாதம் எழுப்பலானும் அத்தியானம் உடைத்தென்று அனுமிக்கப்படும். முறையான் கேட்கப் படுவனவாகிய கடலொலி முதலாய பத்துவகை நாதத்துள் அப்பொழுது கேட்கப்படும் நாதத்தின்வழியே சென்று, தான் பிறனாகாது மனம் ஒடுங்கினதுவே சமாதியாம். அத்தெங்கு, மது உடைத்து ஆகாமையின் வண்டு எய்தப் பெறாமையானும், வண்டு எய்தாமையின் நாதம் கேளாமையானும், நாம் கேளாமையின் அதனோடு மனம் ஓடுங்கல் இன்மையானும் அத்தியானமும் சமாதியும் இன்று என்று அனுமிக்கப்படும். இனி நாவில் குறிக்கும் தியானம் என்னை எனின், 2“வண்ணா னொலிக்குஞ் சதுரப் பலகைமேற் கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினா லண்ணாந்து பார்க்க வழுக்கற்ற வாறே.’’ |
எனவும், 3“நாவி னுனியி னடுவே சிவிறிடிற் சீவனு மங்கே சிவனு முறைவிட மூவரு முப்பத்து மூவருந் தோன்றுவர் சாவது மில்லைச் சதகோடி யூனே.’’ |
எனவும் கூறுமாற்றான் அறிக.
1திருமந்திரம் 661 2திருமந்திரம் 80. 3திருமந்திரம் 806 |