பக்கம் எண் :

களவியல் சூ. 11 101

நல்ல ளாகுத லறிந்தாங்
கரிய ளாகுத லறியா தோயே” 1      (குறுந்-120)

எனவரும்.

‘வழி’ என்றதனாற் பிரியலுறுவான் கூறுவனவுங் கொள்க.

“வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாதல்
அதற்கன்ன ணீங்கு மிடத்து2       (குறள்-1124)

இது, மூன்றாங் கூட்டத்தினையுங் கருதலின் ஈண்டு வைத்தார். இது முதலாகப் பாங்கற் கூட்டமாம்.

‘கலங்கலும்’ எனவே அக்கலக்கத்தான் நிகழ்வனவெல்லாங் கொள்க. அவை தலைவன் பாங்கனை நினைத்தலும் அக் கலக்கங் கண்டு பாங்கன் வினாவுவனவும் அதுவே பற்றுக் கோடாக உற்றதுரைத்தலும் பிறவுமாம்.

(உ-ம்)

பண்டையை யல்லைநீ யின்று பரிவொன்று
கொண்ட மனத்தை யெனவுணர்வல்-கண்டாயா
னின்னுற்ற தெல்லா மறிய வுரைத்தியாற்
பின்னுற்ற நண்பினாய் பேர்த்து”3

எனவும்,

“வஞ்சமே யென்னும் வகைத்தாலோர் மாவினாய்த்
தஞ்சந் தமியனாய்ச் சென்றேனென்-னெஞ்சை
நலங்கொண்டார் பூங்குழலா ணன்றாயத் தன்றென்
வலங்கொண்டாள் கொண்டா ளிடம்”4

எனவும்,      (திணை மாலை-9)


1. கருத்து: நெஞ்சமே! நம் காதலி நல்லவள் என்பதை நீ அறிந்தது போல அடைதற்கு அரியவள் என்பதை அறியாயினாய். அதனால் வறியவன் உலக இன்பத்தை விரும்பினாற்போல் அவளை அடைய விரும்பினாய். அது நடவாது.

2. கருத்து: உடன் இருக்கும் போது உயிர்க்கு வாழ்தல் ஆகிய அத்தன்மையுடையள்; விட்டு நீங்கும் போது அவ்வுயிர்க்குச் சாதல் அத்தன்மையள்.

3. கருத்து: பின்னிப் பிணைந்த நட்புடையாய்! நீ முன் போல் இல்லை. துன்பம் ஒன்றுடைய மனத்தனாய் உள்ளாய் என்பதை உணர்ந்தேன். நினக்குற்ற துயரெல்லாம் யான் அறிய பெயர்த்து உரைப்பாயாக.

4. கருத்து: அம்புபட்ட மான் ஒன்று இவ்வழி வந்ததோ என்று ஒரு வினாவை விடுத்துச் சென்றேன். தன்