என்பதும் அது. ஏனையவற்றிற்குச் சான்றோர் செய்யுட்கள் வருவன உளவேற் காண்க. பெற்றவழி மகிழ்ச்சியும்-சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி அவன் மனம் மகிழும் மகிழ்ச்சியும். ‘பேராச் சிறப்பின்’ என்றதனாற் பாங்கனால் நிகழும் இடந்தலைப் பாட்டிற்கும் இது கொள்க. (உ-ம்) “ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமக ணறுந்தண் ணீர ளாரணங் கினளே யினைய ளென்றவட் புனையள வறியேன் சிலமெல் லியவே கிளவி யணைமெல் லியல் யான் முயங்குங்காலே”1 (குறுந்-70) பிரிந்தவழிக் கலங்கலும்-அங்ஙனம் புணர்ந்து பிரிந்துழி அன்பு மிகுதியால் தான் மறைந்து அவட் காணுங்கால் ஆயத்திடையுஞ் சீறூரிடையுங் கண்டு இனிக் கூடுதல் அரிதென இரங்கலும். (உ-ம்) “குணகடற் றிரையது பறைதபு நாரை திண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை யயிரை யாரிரைக் கணவந் தாஅங்குச் சேய ளரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே”1 (குறுந்-128) “இல்லோ னின்பங் காமுற் றாஅங் கரிதுவேட் டனையா னெஞ்சே காதலி
1. கருத்து: பக்கம் 84ல் காண்க. 2. கருத்து: நெஞ்சமே! கிழக்குக் கடற்கரையில் உள்ள சிறகிழந்த நாரை பொறையனுடைய மேலைக் கடற்கரையில் தொண்டித் துறையில் உள்ள அயிரை மீனை உண்ண வாயைத் திறந்தது போல நெடுந் தொலைவில் உள்ளவளும் அடைவதற்கு அரியவளுமாகிய அவளை நினைகின்றாய்; அதனால் வருந்துகின்றாய். அப்படிப்பட்ட ஊழ் உடையை போலும் நீ. |