பக்கம் எண் :

களவியல் சூ. 12135

பனிமருந்து விளைக்கும் பரூஉக்க ணிளமுலைப்
படுசாந்து சிதைய முயங்கும்
சிறுகுடிக் கானவன் பெருமட மகளே”1

“கோடாப் புகழ்மாறன் கூட லனையாளை
யாடா வடகினுங் காணேன்போர்-வாடாக்
கருங்கொல்வேன் மன்னர் கலம்புக்க கொல்லோ
மருங்குல்கொம் பன்னாண் மயிர்”2      (திணைமாலை-4)

“பெறுவ தியையா தாயினு முறுவதொன்
றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க்
கைவள ரோரி கானந் தீண்டி
யெறிவளி கமழு நெறிபடு கூந்தன்
மையீ ரோதி மாஅ யோள்வயி
னின்றை யன்ன நட்பி னிந்நோ
யிறுமுறை யெனவொன் றின்றி
மறுமை யுலகத்து மன்னுதல் பெறினே” 3       (குறுந்-199)

“நோயு மகிழ்ச்சியும் வீடச் சிறந்த
வேய்வனப் புற்ற தோளை நீயே
யென்னுள் வருதியோ வெழினடைக் கொடிச்சி


1. கருத்து: நெஞ்சமே! சாந்தம் சிதைய முயங்கும் கானவன் மடமகள் முயங்குங்கால் என்றும் இனியளாயினும் பிரியுங்கால் என்றும் இன்னாதவளே யாவள்.

2. கருத்து: மாறன் மதுரை யன்ன தலைவியை விளையாட்டிடத்தும் காணேன். அவள் மயிர்கள் வளர்ந்து திரண்டு மன்னர் முடியாகப் போயினவோ. இதில் அடா அடகு-சமையல் பெறாத கீரை-அது பண்ணைக் கீரை. பண்ணை என்பது விளையாட்டு. மன்னர் கலம் என்பது முடி. இங்கு முடியாக வளர்ந்து பருவம் காட்ட அன்னை இற்செறித்தாள் என்பது குறிப்பு.

3. கருத்து: நெஞ்சே! வள்ளல் ஓரியின் மலர்மிக்க கானத்தை அளவி வருதலால் மணம் நாறும் காற்றுப் போலும் மணம் மிக்க கூந்தலையுடைய மாயோளை நாம் அடைவது இயல்வதன்று. நாம் அடையும் நோயும் உண்டு. அவள்பால் கொண்ட நட்பு இம்மையில் அழிதல் இன்றி மறுமையும் தொடர்ந்து நிலைபெறும். ஆதலின் மறுமையில் அவளை அடையலாம். வாழி.