மீன்கண் டுஞ்சும் பொழுதும் யான்கண் டுஞ்சேன் யாதுகொ னிலையே”1 (நற்றிணை-319) இஃது இரவுக் குறியிற் பரிவுற்றது. “மழைவர வறியா மஞ்ஞை யாலு மடுக்க னல்லூ ரசைநடைக் கொடிச்சி தானெம் மருளா ளாயினும் யாந்த னுள்ளுபு மறந்தறி யேமே”2 (ஐங்குறு-298) “களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம் வெளிப்படுந் தோறு மினிது”3 (குறள்-1145) எனவும் வரும். இன்னும் ‘பரிவுற்று மெலியினும்’ என்றதனானே புணர்ந்து நீங்குந் தலைவன் ஆற்றாது கூறுவனவும், வறும்புனங் கண்டு கூறுவனவும், இற்செறிப்பறிவுறுப்ப ஆற்றானாய்க் கூறுவனவும், தோழி இற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇக் கூறுவனவும், இரவுக் குறிக்கண் வருகின்றான் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவன வெல்லாம் இதன் கண் அமைக்க. “என்று மினிய ளாயினும் பிரித லென்று மின்னா ளன்றே நெஞ்சம்
1. கருத்து: இருள் மயங்கிய நள்ளிரவில் கடலும் ஒலியடங்கியது; ஊதைக் காற்றும் ‘தௌ’ என ஒலியடங்கியது. சதுக்கங்களில் கூகையானது தன் பெடையுடன் கூடி அச்சம் தோன்றக் குழறும். பேய்களும் நடமாடும். இப்படிப்பட்ட நேரத்தில் குறுமகளின் முலையை முயங்க எண்ணி மீன் கண் உறங்கும் இரவெல்லாம் யான் கண் உறங்கவில்லை. எந்நிலை யாதாகுமோ? அறியேன். 2. கருத்து: மழை வரவறிந்து அகவும் மயில் வாழும் மலையடுக்கத்து நல்ல ஊரில் உள்ள கொடிச்சியானவள் தான் எனக்கு அருளாளாயினும் யான் அவளை நினைத்து மறந்தேனில்லை. 3. கருத்து: காமம் அலரால் வெளிப்பட இனியதாதல் கள்ளுண்பவர் அதனை யுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்டலையே விரும்பினாற் போலும். |