பக்கம் எண் :

களவியல் சூ. 12133

(உ-ம்)

“ஆனா நோயோ டழிபடர்க் கலங்கிக்
காமம் கைம்மிகக் கையறு துயரங்
காணவு நல்கா யாயிற் பாணர்
பரிசில் பெற்ற விரியுளை நன்மான்
கவிகுளம்பு பொருத கன்மிசைச் சிறுநெறி
யிரவலர் மெலியா தேறும் பொறைய
னுரைசா லுயர்வரைக் கொல்லிக் குடவயி
னகலிலைக் காந்த ளலங்குலைப் பாய்ந்து
பறவை யிழைத்த பல்க ணிறாஅற்
றேனுடை நெடுவரைத் தெய்வ மெழுதிய
வினைமாண் பாவை யன்னோள்
கொலைசூழ்ந் தனளா னோகோ யானே”1      (நற்றிணை-185)

இது பகற் குறியிற் பரிவுற்றது.

“ஓதமு மொலியோ வின்றே யூதையுந்
தாதுளர் கானற் றவ்வென் றன்றே
மணன்மலி மூதூ ரகனெடுந் தெருவிற்
கூகைச் சேவல் குராலோ டேறி
யாரிருஞ் சதுக்கத் தஞ்சுவரக் குழறு
மணங்குகால் கிளரு மயங்கிரு ணடுநாட்
பாவை யன்ன பலராய் வனப்பிற்
றடமென் பணைத்தோண் மடமிகு குறுமகள்
சுணங்கணி வனமுலை முயங்க லுள்ளி


1. கருத்து: பாங்கனே! பொறையனின் கொல்லிமலை மேற்கே தேன்கூடுகளையுடைய அடுக்கத்தில் தெய்வம் செய்து வைத்த பாவை போல்வாள் என்னைக் கொல்லச் சூழ்ந்தாள். அதனால் பொறுக்க முடியாத துன்பத்தைத் தாங்கிக் காமம் மிகவும் செயலற்ற துயரம் யான் உற்றதைக் கண்டும் காணாதாய் போல அவளைச் சேர்த்து வைக்காயானால் நான் என் செய்வேன். இப்படி அமைந்த ஊழ்வினையையே யான் நோவேன்.