பக்கம் எண் :

190தொல்காப்பியம்-உரைவளம்

 பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்
கைப்பட்டுக் கலங்கினும் நாணுமிக வரினும்
இட்டுப்பிரிவு இரங்கினும் அருமைசெய்து அயர்ப்பினும்
வந்தவழி எள்ளினும் விட்டுயிர்த்து அழுங்கினும்
நொந்துதெளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும்
பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்
வரும்தொழிற்கு அருமை வாயில் கூறினும்
கூறிய வாயில் கொள்ளாக் காலையும்
மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு
நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்
உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர்செல
வேற்றுவரைவு வரின்அது மாற்றுதற் கண்ணும்
நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி
ஒருமைக் கேண்மையின் உறுகுறை தெளிந்தோள்
அருமை சான்ற நாலிரண்டு வகையிற்
பெருமை சான்ற இயல்பின் கண்ணும்
பொய்தலை அடுத்த மடலின் கண்ணும்
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்
குறியின் ஒப்புமை மருடற் கண்ணும்
வரைவுதலை வரினும் களவுஅறி வுறினும்
தமர்தற் காத்த காரண மருங்கினும்
தன்குறி தள்ளிய தெருளாக் காலை
வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித்
தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும்
வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும்
பொழுதும் ஆறும் புரைவது அன்மையின்
அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்
காமம் சிறப்பினும் அவன்அளி சிறப்பினும்
ஏமம் சான்ற உவகைக் கண்ணும்
தன்வயின் உரிமையும் அவன்வயின் பரத்தையும்
அன்ன உளவே ஓரிடத் தான      (21)