பக்கம் எண் :

192தொல்காப்பியம்-உரைவளம்

the joy of uninterrupted pleasure, the expressions take place because of her right and of his love for some other lady (on the part of the lady-love.)

இளம்.

என்றது, தலைவிக்கு இயற்கைப் புணர்ச்சி முதலாகக் களவின்கட், ‘குறிப்பினு மிடத்தினுமல்லது’ (களவியல்-18) நிகழ்ச்சியில்லாவற்றினும் கூற்று நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : மறைந்தவற் காண்டல் என்பது-தன்னைத் தலைவன் காணாமல் தான் அவனைக் காணுங் காட்சி.

தற்காட்டுறுதல் என்பது-தன்னை அவன் காணுமாறு நிற்றல்.

நிறைந்த.........மழுங்கல் என்பது-நிரம்பிய வேட்கையால் தலைவன் கூறிய சொற்கேட்டு எதிர்மொழி கூறாது மடிந்து நிற்றல்.

இம்மூன்றிடத்தினுங் கூற்று நிகழாது.

வழிபாடு மறுத்தல் என்பது-அதன்பின் இவன் வேட்கைக் குறிப்புக் கண்டு சாரலுற்றவழி அதற்கு உடம்படாது மறுத்தல்.

அது குறிப்பினானும் கூற்றினாலும் வரும்.

மறுத்தெதிர் கோடல் என்பது-மறுத்தாங்கு மறாது பின்னும் ஏற்றுக் கோடல்.

பழிதீர்.....தோற்றல்-குற்றந்தீர்ந்த முறுவல் சிறிது தோற்றுவித்தல்.

அது புணர்தற்கு உடன்பாடு காட்டி நிற்கும் இவை ஆறு நிலையும் புணர்ச்சிக்கு முன் நிகழும். ஈண்டுங் குறிப்பு நிகழ்ச்சி யல்லது கூற்று நிகழ்ச்சி அருகியல்லது வாராது. அவற்றுள் சில வருமாறு:-

“இகல் வேந்தன் சேனை” என்னும் முல்லைக்கலியுள்
மாமருண் டன்ன மழைக்கண்சிற் றாய்த்தியர்
நீமருட்டுஞ் சொற்கண் மருள்வார்க் குரையவை
யாமுனியா ஏறுபோல் வைகற் பதின்மரைக்
காமுற்றுச் செல்வாயோர் கட்குத்திக் கள்வனை