நீஎவன் செய்தி பிறர்க்கு யாம்எவன் செய்தும் நினக்கு1 இது வழிபாடு மறுத்தது. இன்னும் இதனுள், “தேங்கொள் பொருப்பன் சிறுகுடி எம்ஆயர் வேந்தூட்டு அரவத்து நின்பெண்டிர் காணாமல் காஞ்சித்தா துக்கன்ன தாதெரு மன்றத்துத் தூங்குங் குரவையுள் நின்பெண்டிர் கேளாமை ஆம்பற் குழலாற் பயிர்பயிர் எம்படப்பைக் காஞ்சிக்கீழ்ச் செய்தேங் குறி.”2 (கலத்-108) இது மறுத்தெதிர் கோடல். பழிதீர் முறுவல் சிறிதே தோற்றற்கு உதாரணம்:- “அன்னையோ, மன்றத்துக் கண்டாங்கு சான்றார் மகளிரை இன்றி அமையேனென் றின்னவுஞ் சொல்லுவாய் நின்றாய்நீ சென்றீ எமர்காண்பர் நாளையுங் கன்றொடு சேறும் புலத்து”3 (கலத்-110) இதனுள் ‘அன்னையோ’ என்பது நகையொடு கூடிய சொல்.
1, 2. கருத்து: மான்போல் மருளும் கண்ணுடையராய சிறிய ஆய்ச்சியர்களிடம் நீ மருட்டும் சொற்களைக் கூறு. யான் மருளேன். பல பசுக்களை வெறாது கூடும் ஏறு போல நீ தினமும் பத்து மகளிரைக் காமுற்றுக் கூடும் கண்குத்திக்கள்வன் மகன் அல்லையோ. நீ பிறர்க்கு யாது செய்வை; யாம் நினக்கு என் செய்வோம். .........தேனைக் கொண்ட பொதிய மலைக்குரியோன் சிறு குடியில் உள்ள எம் ஆயர் வேந்தன் வாழத் தெய்வத்துக்கு மடை கொடுக்கும் விழாவுக்கு வந்த பெண்டிர் நின்னைக் காணாமலும், குரவைக் கூத்துக்கு வரும் நின் பெண்டிர் கேளாமலும் காஞ்சி நீழலில் செய்த குறியிடத்து வந்து ஆம்பற் பண் அமைந்த குழலால் அழைப்பாயாக. 3. கருத்து: அப்படிப்பட்டவனா நீ. ஊர் மன்றத்துச் சான்றோர் மகளிரையின்றி வாழேன் என்று பலவும் சொல்க. ஆனால் இங்கு எமர் நின்னைக் காண்பர். நாளையும் யாங்கள் கன்றோடு மேய்ச்சல் புலம் செல்வோம். ஆண்டு வருக. தொ-13 |