பக்கம் எண் :

194தொல்காப்பியம்-உரைவளம்

கைப்பட்டுக் கலங்கினும் என்பது-தலைவன் கையகப்பட்ட பின்பு என் செய்தே மாயினேம் எனக் கலக்கமுறினும் என்றவாறு.

நாணுமிக வரினும் என்பது-தலைவிக்கு முன்புள்ள நாணத்தினும் மிக நாணம் வந்துழியும் என்றவாறு.

இட்டுப் பிரிவிரங்கினும் என்பது-தலைவன் இட்டு வைத்துப் பிரிவன் என அஞ்சியதற்கு இரக்க முறினும் என்றவாறு.

அருமை செய்தயர்ப்பினும் என்பது-தலைவன் வருதற்குக் காவலாகிய அருமை செய்ததனால் அவனும் வருதலைத் தவிரினும் என்றவாறு,

வருதலைத் தவிர்தலை அயர்ப்பு என்றார். அன்றியும் புறத்து விளையாடுதற்கு அருமை செய்ய மயக்கம் வரினும் என்றுமாம். செய்தென்பதனைச் செயவெனத் திரிக்க.

வந்தவழி எள்ளினும் என்பது-தலைவன் வந்தவிடத்து அலராகு மென்றஞ்சி இகழ்ந்த வழியும் என்றவாறு.

விட்டுயிர்த் தழுங்கினும் என்பது-மறையாது சொல்லி இரங்கினும் என்றவாறு.

நொந்து தெளிவொழிப்பினும் என்பது-தலைவன் தெளிவித்த தெளிவை நொந்து, அதனை யொழிப்பினும் என்றவாறு.

அச்சம் நீடினும் என்பது-தலைவன் வருகின்றது இடையீடாக அச்சம் மிக்குழியும் என்றவாறு.

பிரிந்தவழிக் கலங்கினும் என்பது-தலைவன் பிரிந்தவழிக் கலக்கமுறினும் என்றவாறு.

அது தாளாணெதிரும் பிரிவு.1

பெற்றவழி மலியினும் என்பது-தலைவனோடு கூட்டம் பெற்றவழி மகிழினும் என்றவாறு.

வருந்தொழிற்கு அருமை வாயில் கூறினும் என்பது-தலைவன் வருதற்கு இடையீடாகக் காவலர் கடுகுதலான் ஈண்டு வருதல் அரிதெனத் தோழி தலைவிக்குச் சொல்லினும் என்றவாறு.


1. சூ.17