கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் மன்ற வேங்கை மலர்ப்பத நோக்கி யேறா திட்ட வேமப் பூசல் விண்டோய் விடரகத் தியம்புங் குன்ற நாடற் கண்டவெங் கண்ணே” 1 (குறுந்-241) இது தன் ஆற்றாமைக்கு ஆற்றாத தோழியை ஆற்றுவிக்கின்றாள் அவ்விரண்டுங் கூறியது. வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும்-தலைவி வேறுபாடு எற்றினானாயிற்றென்று வேலனை வினாய் வெறியாட்டு எடுத்துழித் தலைவி அஞ்சும் அச்சத்தின் கண்ணும்: அது பண்டேயுந் தன் பரத்தைமையான் நெகிழ்ந்தொழுகுவான், இன்று நம் ஆற்றாமைக்கு மருந்து பிறிதுமுண்டென்றறியின் வரைவு நீடுமென்று அஞ்சுதல். (உ-ம்): “பனிவரை நிவந்த பயங்கெமு கவாஅற் றுனியில் கொள்கையொ டவர்நமக் குவந்த வினிய வுள்ள மின்னா வாக முனிதக நிறுத்த நல்க லெவ்வஞ் சூருறை வெற்பன் மார்புறத் தணித லறிந்தன ளல்ல ளன்னை வார்கோற் செறிந்திலங் கெல்வளை நெகிழ்பத நோக்கிக் கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப் பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ முருக னாரணங் கென்றலி னதுசெத் தோவத் தன்ன வினைபுனை நல்லிற் பாவை யன்ன பலராய் மாண்கவின் பண்டையிற் சிறக்கவென் மகட்கெனப் பறைஇக் கூடுகொ ளின்னியங் கறங்கக் களனிழைத் தாடணி யயர்ந்த வகன்பெரும் பந்தர்
1. கருத்து: பக்கம் 212ல் காண்க. |