வெண்போழ் கடம்பொடு சூடி யின்சீ ரைதமை பாணி யிரீஇக் கைபெயராச் செல்வன் பெரும்பெய ரேத்தி வேலன் வெறியயர் வியன்களம் பொற்ப வல்லோன் பொறியமை பாவையிற் றூங்கல் வேண்டி னென்னாங் கொல்லோ தோழி மயங்கிய மையற் பெண்டிர்க்கு நொவ்வ லாக வாடிய பின்னும் வாடிய மேனி பண்டையிற் சிறவா தாயி னிம்மறை யலரா காமையோ வரிதே யஃதாஅன் றறிவ ருறுவிய வல்லல்கண் டருளி வெறிகமழ் நெடுவே ணல்குவ னெனினே செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின் யானுயிர் வாழ்த லதனினு மரிதே” 1 (அகம்-98) ‘இன்னாவாக்கி நிறுத்த எவ்வம்’ என்பது அவன் வயிற் பரத்தைமை, ‘உயிர் வாழ்தல் அரிது’ என்பது தன் வயினுரிமை. அவை வெறியஞ்சியவழி நிகழ்ந்தன. குறியின் ஒப்புமை மருடற் கண்ணும்-இரவுக்குறி வருந்தலைவன் செய்யுங்குறி பிறிதொன்றனான் நிகழ்ந்து தலைவன் குறியை ஒத்தவழி, அதனை மெய்யாக உணர்ந்து தலைவி
1. கருத்து: தலைவி தோழியிடம் கூறியது. தோழீ குளிர்ந்த மலையின் அடுக்கத்தில் தலைவன் நமக் களித்த இன்பம் இடையீட்டால் துன்பமாக அதனால் வந்த என் பெருந்துன்பமானது அத்தலைவன் மார்பால் தான் தணியும் என்பதைத் தாய் அறியாளாய் என்கைவளை நெகிழ்தலைப் பார்த்து உடல் மெலிவின் காரணத்தைக் கட்டுவிச்சியிடம் வினவ, அவள் அரிசி தினை முதலியன கொண்டு அது முருகனாலாயது எனக் கூற, அதுகேட்டு வேலனைக் கொண்டு வெறியாடின் என்ன நேருமோ? வெறியாடிய பின்னரும் என் நோய் தீராதாயின் ஊரில் இக்களவொழுக்கம் வெளிப்படாதிருத்தல் அரிதாகும். அதனினும் தலைவன் இந்நோய் பிறிதொன்றால் வந்தது எனப் பிறர் கூறக் கேட்பின் யான் உயிர் வாழ்தல் அரிதாகும். |