பக்கம் எண் :

களவியல் சூ. 21251

மயங்கிய வழியும்; புனலொலிப் படுத்தன் முதலிய அவன் செயற் கையானன்றி இயற்கையான் நிகழ்ந்துழிக் குறியினொப்புமையாம்.

(உ-ம்):

“மெய்யோ வாழி தோழி சாரன்
மைப்பட் டன்ன மாமுக முசுக்கலை
யாற்றப் பாயாத் தப்ப லேற்ற
கோட்டொடு போகி யாங்கு நாடன்
றான்குறி வாயாத் தப்பற்குத்
தாம்பசந் தனவென் றடமென் றோளே”1      (குறுந்-121)

கோடு ஆற்றப் பாயாது வேண்டியவாறு பாய்ந்து அதனை முறித்த முசுப்போல, நாங்குறிபெறுங் காலத்து வாராது புள்தாமே வெறித்து இயம்புந் துணையும் நீட்டித்துப் பின்பு வருதலிற் குறிவாயாத்தப்பு அவன் மேல் ஏற்றி, அதற்குத் தோள் பசந்தனவென்று, பின்னொருநாள் அவன் வந்துழித் தோழியை நோக்கி இவ்வரவு மெய்யோவெனவே, அவ்விரண்டும் பெற்றாம்.

“அணிகடற் றண்சேர்ப்பன் றேர்ப்பரிமா பூண்ட
மணியரவ மென்றெழுந்து போந்தேன்-கணிவிரும்பு
புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தே னொளியிழா
யுள்ளுருகு நெஞ்சினேன் யான்”2      (ஐந்-ஐம்-50)

இதுவும் அது.

வரைவு தலைவரினும்-களவு வெளிப்பட்ட பின்னராயினும் முன்னராயினும் வரைந்தெய்துதற் செய்கை தலைவன்கண்


1. கருத்து தோழீ! முன்னே தலைவன் வந்தான் என எண்ணிக் குறியிடம் சென்று ஏமாற்றம் உற்றேன். ஆண் குரங்கு தாங்கும் வலியில்லாத கொம்பில் பாய்ந்தமையால் அதன் பாரத்தைத் தாங்காது முறிந்த தவறு குரங்கினதாகவும் கொம்பினிடத்துச் சார்த்திக் கூறுமாறு போலத் தலைவன் குறியிடம் வாராத தவற்றுக்கு என் தோள்கள் பசலையுற்றன. இன்றும் அவன் வந்தானாக நீ கூறுவது மெய்யோ பொய்யோ யான் அறிகிலேன்.

2. கருத்து: பக்கம் 213ல் காண்க.