“நிலாவின் இலங்கும்” என்னும் அகப்பாட்டினுள், “சேர்ந்தனிர் செல்குவி ராயின் யாமும் எம்வரை அளவையில் பெட்குவம் நும்மொப் பதுவோ உரைத்திசின் எமக்கே” 1 (அகல்-290) என்பதும் கொள்க. இதனாற் பயன் இல்லறம் நடத்தல் வேண்டும் என்பது. புணர்ந்துழி யுணர்ந்த அறிமடச் சிறப்பினும் என்பது தலைவனொடு தலைவி புணர்ந்தவழிஆண்டுப் பொருந்திய அறிவுமடம்பட்ட சிறப்பின்கண்ணும் என்றவாறு. அஃதாவது அல்ல குறிப்படுதல். அவ்வழியும் தோழி கூற்று நிகழும். “கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூ இடையுள் இழுதொப்பத் தோன்றிப் - புடையெலாந் தெய்வம் கமழுந் தெளிகடல் தண்சேர்ப்பன் செய்தான் தெளியாக் குறி”2 (ஐந்திணையைம்-49) “இருமணல் எக்கர் அகன்கானல் சேர்ப்பன் கடுமான் மணியரவம் என்று-கொடுங்குழை
தொடங்கினள். நின் கோவேறு கழுதையும் சுறாமீன் தாக்கியதால் உண்டான காலிற் புண் காரணமாக வேகம் மெலிந்தது. அதனால் நின்னுடன் வரும் இளையருடன் மேலும் செல்லாமல் இவ்விரவில் எம் நெய்தற் பெருங்கழி நாட்டில் தங்கிப் பின் சென்றால் குறைவது உண்டோ. 1. கருத்து: எம் இல்லில் தங்கிச் செல்வீராயின் யாங்கள் அதனை எம் மலையளவாகக் கருதி லிருப்புடன் உபசரிப்போம். நுமக்கு ஒக்குமோ. கூறுமின் எமக்கு. 2. கருத்து: தாழையின் குவிதல் மலர்ந்த ஒள்ளிய பூவினது உள்ளே உள்ள சோற்றால் வெண்ணெய் திரள் ஒப்பத் தோன்றும்படியாகி எங்கும் தெய்வ மணம் போல் கமழும் கடற்சேர்ப்பன் நமக்குத் தெளிய முடியாத குறியிடத்தைச் செய்தான். அதனால் நாம் அல்லகுறிப்பட்டோம். |