பக்கம் எண் :

களவியல் சூ. 24311

கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பல்மீன் வேட்டத் தென்னையர் திமிலே1      (குறுந்-123)

எனவும் வரும்.

வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தினும் என்பது-வேளாண்மையாவது உபகாரம். பெரு நெறியாவது உபகாரமாகிய பெரிய நெறி என்க. அதனைத் தோழி தலைவனை வேண்டிக் கோடற்கண்ணும் என்றவாறு.

“நெடுவேள் மார்பின் ஆரம் போலச்
செவ்வாய் வானந் தீண்டிமீன் அருந்தும்
பைங்காற் கொக்கின் நிறைபறை யுகப்ப
எல்லை பைப்பயக் கழிப்பிக் குடவயின்
கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு
மதரெழில் மழைக்கண் கலிழ இவளே
பெருநாண் அணிந்த சிறுமென் சாயல்
மாணலஞ் சிதைய ஏங்கி ஆனாது
அழல்தொடங் கினளே பெரும அதனாற்
கழிச்சுறா வெறிந்த புட்டாள் அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைய
வல்வில் இளையரொ டெல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்
சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே”2      (அகம்-120)

என்பதும்.


1. கருத்து: தோழீ! நம் தலைவர் புன்னைமரச் சோலையில் இருள் குவிந்ததுபோலும் நிழலில் நிலவு குவிந்தது போலும் வெண் மணல் உள்ள ஒரு பக்கமாகிய குறியிடத்தில் இன்றும் வந்திலர். வரின் அளவளாவுதல் எளிதாம். ஆனால் கடலில் நம் அண்ணன்மாரின் படகுகள் வருகின்றன. எனவே அவர் காலம் தாழ்த்து வருவராயின் நம்மைக் காணல் அரிதாகும்.

2. கருத்து: பெரும! ஞாயிறு மேற்கு மலையைச் சேர்ந்தது. தலைவியும் நின்னைக் காணாமையால் அழத்