பக்கம் எண் :

310தொல்காப்பியம்-உரைவளம்

வருவை யாகிய சின்னாள்
வாழா ளாதல்நற் கறிந்தனை செல்மே”1      (நற்றிணை-19)

இது தலைவன் பிரிவு வேண்டிய வழிக் கூறியது.

“சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கல் விடரளை வீழ்ந்தென வெற்பிற்
பெருந்தேன் இறாலொடு சிதறு நாடன்
பேரமர் மழைக்கண் கலிழத்தன்
சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய்”2      (ஐங்குறு-214)

இது தலைவிக்கு உரைத்தது.

“கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
வானுயர் எறிமணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே” 3      (ஐங்குறு-199)

இது தலைவியை ஆற்றுவித்தது.

இருள் திணிந்தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்
நிலவுக் குவித்தன்ன வெண்மண லொருசிறைக்


1. கருத்து: இறால் மீனின் முதுகுப்புறம் போன்ற அடிப் பகுதியையும் சுறா முள் போன்ற முள்ளையும் உடைய தாழை யானையின் மருப்புப்போல அரும்பு கொண்டு விழவுக் களம் எங்கும் மணம் வீசும் படியான கடற்கரைத் தலைவனே! நீ நின் பாகன் தேரை இயக்குகையாலே நின்னூர்க்குச் செல்வையாயின் நீவரும் சிலநாள் வரையும் உயிர் வாழாள் என்பதை நன்கு அறிந்து செல்வாயாக.

2. கருத்து: தோழீ! மலைச்சாரலில் தளிரிடையே பழுத்த பலாப்பழமானது கற்களின் பிளந்த வளைவுகளில் வீழ்ந்ததாக மலையில் கட்டிய தேனிறால் சிதறுகின்ற நாடன் பெரிய மதர்த்த கண் அழுமாறு தன்னுடைய சீருள்ள நன்னகர்க்குச் செல்லும்.

3. கருத்து: தோழீ! நம் செறிந்த வளைகளை நெகிழச் செய்தவனது கடல் எறியும் நாட்டை கானலிடத்துப் பெரிய துறையில் உள்ள வானளவாக உயர்ந்த மணல் மேட்டில் ஏறிக் காண்பாம். வருக.