பக்கம் எண் :

களவியல் சூ. 24309

கூழைக் கெருமணங் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே” 1      (குறுந்-113)

இது பகற்குறி நேர்ந்தது. ஆண்டுத் தலைவிக்குக் கூறுமாறு:

“ஒலிவெள் ளருவி ஒங்குமலை நாடன்
சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
தொல்முரண் சோருந் துன்னருஞ் சோலை
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி நாமே” 2      (குறுந்-88)

எனவரும்.

வேண்டாப் பிரிவினும் என்பது-புணர்ச்சி வேண்டாது பிரிவு வேண்டினும் என்றவாறு.

இது தலைவன் நெஞ்சினாற் பிரியானென்பதனான் வேண்டாப் பிரிவென்றார். அதுதாளா........வென்பது அலராகுமென்று அஞ்சி ஒருவழித்தணத்தலும் ஒன்று. அவ்வழித் தலைவிக்கு உரைத்தனவும் தலைவற்குரைத்தனவும் உளவாம். அவை வருமாறு:-

“இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை
பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்முதிர்பு
நன்மான் உழையின் வேறுபடத் தோன்றி
விழவுக்களங் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப
இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச்
செலீஇய சேறி யாயின் இவளே


1. கருத்து: தலைவ! எம் ஊர்க்கு அணிமையில் உள்ளது ஒரு பொய்கை. அதற்கு அணியது கான்யாறு. அதன் பக்கத்தில் இரைதேடும் குருகு வருவதல்லது மக்கள் வழக்கம் இல்லாத பொழில் உண்டு. அங்கு எம் கூந்தலுக்கு எருமண் கொணர வருவேன். தலைவியும் உடன் வருவாள்.

2. கருத்து: தோழீ! அடைதற்கரிய மலைச்சாரலில் இடையாமத்தும் நின்னைக்காண வருவர். அதனால் ஊர் அலருக்கு நாணும் நாணத்தை விடுவேமாக.