புணர்ச்சி வேண்டினும் என்பது-மேற் சொல்லப்பட்ட பல்லாற்றானும் தலைவற் கறிவுறுத்தவழிப் பின்னும் புணர்ச்சி வேண்டினும் ஆண்டுத் தோழி கூற்று நிகழும் என்றவாறு. “நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றாற் கௌவையாற் காமம் நுதுப்பேம் எனல்”1 (குறள்-1148) “இவளே, நின்சொற் கொண்ட என்சொல் தேறிப் பசுநனை ஞாழற் பல்கிளை ஒருசிறைப் புதுநல னிழந்த புலம்புமார் உடையள் உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும் நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக் கடலுங் கானலுந் தோன்றும் மடல்தாழ் பெண்ணையஞ் சிறுநல் லூரே” 2 (குறுந்-81) இது பின்னும் புணர்ச்சி வேண்டிய தலைவற்கு இடமுணர்த்தியது. இரவு வருவானைப் பகல் வாவென்றலும் பகல் வருவானை இரவு வாவென்றலும் குறிபெயர்த்தலும் எல்லாம் ஈண்டே கொள்க. “ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச் சேய்த்தும் அன்று சிறுகான் யாறே இரைதேர் வெண்குருகு அல்லது யாவதும் துன்னல் போகின்றாற் பொழிலே யாம்எம்
நல்ல மனைகளையுடைய நகர் வருந்தும்படிக் கொடிய வாடைக் காற்றும் அலைக்கும் அதனால் தலைவ! நும் ஊர் செல்வோம்; எழுக. 1. கருத்து: அலர்ச் சொல்லால் காமத்தை அடக்குவேம் என்பது நெய்யால் நெருப்பை அணைப்பேம் என்பது போலாம். 2. கருத்து: தலைவ! இவள் நீ என்னையிரந்து கூறிய சொற்களை யான் கூறக் கேட்டுத் தெளிந்து வந்து சுர புன்னை மரநீழலின் ஒரு பக்கத்தில் நின்னைக் கூடியமையால் பெற்ற புதிய நலனை நீ பிரிவதால் இழந்து தனிமையுற்றவளானாள். அதனால் அதோ தோன்றும் எம் ஊர்க்கு நீ அடிக்கடி வருதலை நினைத்தல் வேண்டும். |