பக்கம் எண் :

களவியல் சூ. 24307

மின்னிவர் பெரும்பூண் கொண்கனொடு
இன்னகை மேவிநாம் ஆடிய பொழிலே” 1      (நற்றிணை-187)

இது பகற்குறிக் கண்............தலைவன் நீங்கிய வழிக் கூறியது.

எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் என்பது-எண்ணுதற்கு அரிய பல நகையாட்டுக்களைத் தலைவனிடம் குறித்த வகையுங் கூற்று நிகழும் என்றவாறு.

அஃது அலராகுமென்று கூறுதல். இவ்வொழுக்கம் புறத் தார்க்குப் புலனாயினால் அவர் தூற்றி நகைப்பராகலின் நகையாயிற்று.

(உ-ம்)

“நிறைஅரியர் மன்அளியர் என்னாது காமம்
மறைஇறந்து மன்று படும்”2      (குறள்-1138)

எனவும்,

“அன்னையும் அறிந்தனள் அலரு மாயின்று
நன்மனை நெடுநகர் புலம்புகொள உயிர்க்கும்
இன்னா வாடையும் மலையும்
நும்மூர்ச் செல்க எழுகமோ தெய்யோ”3      (ஐங்குறு-238)

எனவும் வரும்.


1. கருத்து: தலைவி தன்னுட் கூறியது. நெய்தற்பூக் குவியவும் நிழல் கிழக்கில் சாயவும் மேலை மலையிற் சேரும் ஞாயிறும் சிவந்து காட்டிய வெப்பம் நிலம் தணியவும் கடற்கரைச் சோலையும் தன் பொலிவு குறைந்தது. பொழுது மறையவே மணிகள் ஒலிக்கக் குதிரைபூட்டிய தலைவன் தேரும் இப்போது யாம் உடம்பு முழுதும் பரவிய காமத்தைத் தணிக்கப் பெறாமல் தொழுது இங்கே நிற்கும்படிச் செல்லுகின்ற இடமும் மறைந்தது. இந்த ஊரும் நாம் அவனொடு மகிழ்ச்சியுண்டாகக் கூடி ஆடிய பொழிலும் எப்படித் தோன்றுமோ அறிகிலேன்.

2. கருத்து: நிறுத்த இயலாதவர் மிகவும் இரங்கத் தக்கவர் என்று கருதாமல் காமமானது நெஞ்சத்து மறைதலைக் கடந்து ஊர்ப் பொதுமன்றத்துக்கு வெளிப்பட்டு விடும்.

3. கருத்து: தாயும் அறிந்தாள்; ஊரில் அலரும் எழுந்தது.