“நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று ஓவத் தன்ன இடனுடை வரைப்பில் பாவை அன்ன நப்புறம் காக்குஞ் சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள் கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக்கொண் டாங்கு நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் கண்டனம் வருகஞ் செல்மோ தோழி கீழு மேலுங் காப்போர் நீத்த வறுந்தலைப் பெருங்களிறு போலத் தமியன் வந்தோன் பனியலை நீயே” 1 (நற்றிணை-182) இது வந்தான் எனக் கூறியது. “நெய்தல் கூம்ப நிழல்குணக் கொழுகக் கல்சேர் மண்டிலஞ் சிவந்து சினந்தணியப் பல்பூங் கானலும் அல்கின் றன்றே இனமணி ஒலிப்பப் பொழுதுபடப் பூட்டி மெய்ம்மலி காமத்து யாந்தொழுது ஒழியத் தேருஞ் செல்புறம் மறையும் ஊரோடு யாங்கா வதுகொல் தானே தேம்பட ஊதுவண்டு இமிருங் கோதை மார்பின்
தில் வந்து பொழிலிலே நின்னைக் காணாமல் வருந்தும். அவன் வருத்தத்தைப் பார்ப்பதற்காக நம்மனையருகில் வளைந்து காணும் புன்னை மரத்தின் அடியில் மறைந்து நிற்போம். வருக, 1. கருத்து: தோழீ! நிலவு மறைந்தது; இருளும் மிகுந்தது. ஓவியம் போன்ற வீட்டில் பாவை போன்ற நம்மைப் பாதுகாக்கும் அன்னையும் தூங்கினாள்; அதனால் கெடுத்துப்போக்கிய நல்ல அணிகலன்களை மீள எடுத்துக் கொண்டாற்போல, நம்மை இற்செறித்தலால் நாம் காணாதிருந்த தலைவனை-கீழிருந்தும் மேலேறியும் காக்கும் பாகர்களை இல்லாத களிறுபோலத் தனியனாய் வந்த தலைவனை பனியலைத்தலான் வருந்தும் நிலையைப் பார்த்து அவன் நல்ல மார்பை முழுமையும் முயங்கி மெல்ல மெல்லத் திரும்பி வருவோம். வா குறியிடம் போகலாம். |