பக்கம் எண் :

களவியல் சூ. 24305

“கடும்புலால் புன்னை கடியுந் துறைவ
படும்புலால் புள்கடிவான் புக்க-தடம்புல்ஆம்
தாழைமா ஞாழல் ததைந்துயர்ந்த தாழ்பொழில்
ஏழைமான் நோக்கி இடம்”1      (திணைமாலை-44)

எனவும் வரும்.

இன்னும் ‘நயம்புரி யிடத்தும்’ என்றதனால் களவொழுக்கம் நிகழாநின்றுழிக் கூறுங் கூற்றும் ஈண்டே கொள்க. அது தலைவன் வருமெனவும் வந்தா னெனவுங் கூறுதலும் தலைமகன் பகற்குறிக் கண் நீங்கியவழிக் கூறுதலும் எனப் பலவாம்.

“கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்
பெயர்பட வியங்கிய இளையரும் ஒலிப்பர்
கடலொடு வியலிடைப் பொலிந்த நறுந்தழை
திதலை யல்குல் நலம்பா ராட்டிய
வருமே தோழி வார்மணற் சேர்ப்பன்
இற்பட வாங்கிய முழவுமுதற் புன்னை
மாவரை மறைகம் வம்மதி பானாள்
பூவிரி கானல் புணர்குறி வந்துநம்
மெல்லிணர் நறும்பொழிற் காணா
அல்லல் அரும்படரே காண்கநாம் சிறிதே” 2      (நற்றிணை-307)

இஃது வருகின்றான் எனக் கூறியது.


எங்களைப் போக விடுவாயாக. ஏன் எனின் இரவும் வருகிறது. என் பாவையின் நெற்றியை ஆரல் மீனையுண்ட வயிற்று நாரை மிதித்தலும் கூடும் ஆதலின்.

1. கருத்து: புலால் நாற்றத்தைப் புன்னைப் பூக்கள் போக்கும் துறைவனே! காய வைத்த புலாலில் வந்து படும் பறவைகளைக் கடிவதற்காக வந்து சேர்ந்த ஏழையாகிய மான்போலும் நோக்கத்தையுடையவள் பயிலும் இடமானது தாழையும் ஞாழலும் செழித்துயர்ந்த பொழிலாகும்.

2. கருத்து: தோழீ! தலைவனின் தேர் மணியும் ஒலித்தது. உடன்வரும் இளையரும் ஆர்த்தன். கடலாடும் இவ் விடத்தில் நின் அல்குல் நலம் பாராட்ட இப்பொழுதே வருவன். இப்பாதியிரவில் புணர்தற்குக் குறித்த இடத்

தொ-20