பக்கம் எண் :

304தொல்காப்பியம்-உரைவளம்

“மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
அம்மலைக் கிழவன் நம்நயந் தென்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்
நீயுங் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந் தளவல் வேண்டு மறுதரற்கு
அரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே” 1      (நற்றிணை-32)

எனவும் வரும்.

நன்னயம் பெற்றுழி நயம் புரியிடத்தினும் என்பது-தலைவி குறை நயந்தமை பெற்றவழி அத்தலைவி நயம்பொருந்தும் இடத்தினுங் கூற்று நிகழும் என்றவாறு.

தலைமகள் குறைநயந்தமை தலைமகற்குக் கூறிய செய்யுள்:-

“நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க
செல்கஞ் செலவியங் கொண்மோ வைகலும்
ஆரல் அருந்திய வயிற்ற
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே” 2      (குறுந்-114)

எனவும்,


1. கருத்து: தோழீ! மாயோன் போலும் மலைப் பக்கத்தில் பலராமன் போலும் அருவி ஒழுகும் அழகிய மலைக்குரியோன் நம்மை விரும்பி நாளும் வந்து வருந்தினான் என்று யான் கூறிய உண்மையான சொல்லை நீ தெளியாயாய் நின்றாய். இனி நீயும் என்னை நீக்கி விட்டு நின் பிற தோழியரோடும் அவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து அறிந்து அவனொடு அளவளாவுதல் வேண்டும். அவன் குறை நயப்பு மறுத்தற்கரிது. பேரியோர் தம்மிடம் நட்புக் கொள்ள வந்தவரை ஆராய்ந்து நட்புச் செய்தல் அல்லது நட்புச் செய்து பின்னர் ஆராய்தல் இல்லை. இதை மனதிற் கொள்க.

2. கருத்து: கொண்க! நெய்தற் பரப்பிடத்தில் என் பாவையைக் கிடத்தி விட்டு நினது குறியிடம் வந்தேன்.