பக்கம் எண் :

களவியல் சூ. 24303

உணர்வொழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரியைம் பாலாய் வண்ணம் உணரேனால்”1      (சிலப்-கானல்-31)

எனவும்,

“தன்குறையீ தென்னான் தழைகொணருந் தண்சிலம்பன்
நின்குறை யென்னும் நினைப்பினனாய்ப் பொன் குறையும்
நாள்வேங்கை நீழலும் நண்ணான் எவன்கொலோ
கோள்வேங்கை அன்னான் குறிப்பு”2      (திணை மாலை-41)

எனவும்,

“ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி
நன்னர் நெஞ்சம் நெகிழ்ந்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுல நல்நாட்டுப் பெய்த
ஏறுடை மழையிற் கலிழுமென் நெஞ்சே” 3      (குறுந்தொகை-176)

எனவும்,


1. கருத்து: ஐம்பால் உடையவளே! துணையோடு ஆடும் நண்டைப் பார்த்துப் பின் இக் கானலிடத்து என்னையும் பார்த்துப் போனான் சேர்ப்பன். அவன் உள்ளத் தன்மையை யான் அறியேன்.

2. கருத்து: தண்சிலம்பன் தன் காரியம் இது என்று கூறவில்லை. தழையுடை கொண்டுவரும். நின்னால் முடிக்கப்படும் குறையுடையேன் என்னும் நினைப்பினளாய் வேங்கை நிழலிலும் சென்று சேரவில்லை. கோள் வேங்கை போன்ற அவனது உள்ளக் குறிப்புதான் யாதாம்?

3. கருத்து: ஒரு நாள் வந்திலன். இரு நாள் வந்திலன். பல நாளும் வந்து பணிந்த மொழி கூறி என் நல்ல நெஞ்சத்தை நெகிழச் செய்தனன். பின்னர் என் நெகிழ்ச்சியறியாது போய்விட்டான். பற்றாகும் அத்தலைவன் யாண்டுளனோ. என் நெஞ்சமானது வேற்றுப் புலத்துப் பெய்த மழை நீர் கலங்கினாற் போலக் கலங்குகின்றது.