மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத் தாம்வினவல் உற்றதொன் றுண்டு”1 (ஐந்திணையைம்-14) எனவும், “நெய்யொடு மயக்கிய உழுத்துநூற் றன்ன வயலையஞ் சிலம்பின் தலையது செயலையம் பகைத்தழை வாடும் அன்னாய்”2 (ஐங்குறு-211) எனவும், இலைசூழ்செங் காந்தள் எரிவாய் முகையவிழ்த்த ஈர்ந்தண் வாடை கொலைவேல் நெடுங்கட் கொடிச்சி கதுப்புளருங் குன்றநாடன் உலைபடு வெந்நோய் உழக்குமால் அந்தோ முலையிடை நேர்பவர் நேரும் இடனிது மொய்குழலே3 எனவும், “புணர்துணையோ டாடும் பொறியலவன் நோக்கி இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
1. கருத்து: தோழீ! நாம் மலைச்சாரலில் தினைப்புனம் காத்திருந்தேமாக நம்மிடத்து தான் எய்தமான் இவ்வழி வந்ததா என வினவுவார்போல வினவினாலும் தாம் வினவ நினைத்ததொரு காரியம் உண்டு. 2. கருத்து: அன்னாய்! நெய்யொடு கலந்து உடைத்த உழுந்து மணிகளைப் பரப்பி வைத்தாற்போல செந்நிறமும் பச்சையிலையும் வெண்மலரும் உடைய வயலைக் கொடி படரும் மலையுச்சியில் உள்ள அசோகத் தழையைத் தலைவன் கொண்டு வந்து கொடுத்ததை நாம் ஏற்காதுவிடின் வாடும். அதனால் அதை ஏற்போமாக. 3. கருத்து: தோழீ! செங்காந்தள் முகையை மலர்விக்கும் வாடைக் காற்றானது கொடிச்சியின் கூந்தலை ஆற்றும் குன்றநாடனானவன் நீருலையானது படும் வெப்பம் போன்ற வெப்ப நோயால்துன்புறும். அந்தோ பாவம்! இவ்விடம் தம் காதலியர் முலையிடத்தைத் தோய்பவர் தோய்தற்குரிய இடமாகும். |