(உ-ம்) “வளைஅணி முன்கை வால்எயிற் றின்னகை இளையர் ஆடுந் தழையவிழ் கானற் குறுந்துறை வினவி நின்ற நெடுந்தேர் அண்ணலைக் கண்டிகும் யாமே” 1 (ஐங்குறு-198) எனவரும். மறைந்து அவள் அருகத் தன்னொடும் அவளொடும் முன்னம் முன்தளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் என்பது-மேல் தலைவி மாட்டுத் தோழி குறைநயப்பிக்கச் சென்றவழித் தோழி சொல்லும் குறிப்புமொழிக்கு அவள் மறைந்து அரியளாகத் தன்னொடும் அவளொடும் குறிப்பினை முன்னர்த் தடுத்துக்கொண்டு வழிபட்டு முயலும் பலவேறு பக்கத்தின் கண்ணும் தோழி கூற்று நிகழும் என்றவாறு. மறைத்தலாவது-தன் மனத்து நிகழ்ச்சியை ஒளித்தல், அருகுதலாவது-இசைவிலாதாரைப்போல நிற்றல். முன்ன முன் தளைதலாவது-கூற்றினானன்றிக் குறிப்பினானுணர்த்தல். ‘முதன் மூன்றளைஇ’ என்று பாடமாயின், மனத்தினானும், மொழியினானும், உடம்பினானும் ஒருங்கே அளவி என்றுமாம். பின்னிலை நிகழும் பல்வேறு மருங்காவது-வழிபாடு கொடு வருங் கூற்றுவேறுபாடு. எனவே தலைவிக்குத் தழையும் கண்ணியும் கொண்டு ஒருவன் நம் புனத்தயல் வாராநின்றான் எனவும், அவன் என்மாட்டு ஒரு குறையுடையன் போலும் எனவும், அருளுவார்க்கு இஃது இடமெனவும், அவன் குறை மறுப்பின் மடலேறுவல் எனக் கூறிப் போந்தான் பின்பு வரக் கண்டிலேன் எனவும், இந்நிகரன கூறுதல். அவை வருமாறு: “புனைபூந் தழைஅல்குல் பொன்அன்னாய் சாரல் தினைகாத் திருந்தேம்யா மாக-வினைவாய்த்து
1. கருத்து: வளையணிந்த முன் கைகளையும் வெண்பல் விளங்கும் முறுவலையும் உடைய இள மகளிர் ஆடும் முறுக்கவிழும் மலர்களுடைய கானலிடத்து குறுந்துறை யாண்டுளது என வினவி நின்ற நெடிய தோள்கள் உடைய அண்ணலைக் காண்போம் வருக. |