“நிலவு மிருளும் போல நெடுங்கடற் கழியுங் கானலு மணந்தன்று நுதலுந் தோளு மணிந்தன்றாற் பசப்பே” 1 எனவரும். ஐயச் செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்-தலைவிக்குக் கூட்டம் உண்டு கொலென்று தாய் ஐயுற்றவழி அவ்வையப்பட்ட செய்கையைத் தாய்க்கு எதிரே நின்று மறுத்து அதனைப் பொய்யெனவே கருதும்படி அவள் மனத்தினின்றும் போக்கி மெய்யல்லன சில சொற்களை மெய்வழிப்படுத்து அறிவு கொள்ளக் கொடுப்பினும். (உ-ம்) “உருமுரறு கருவிய பெருமழை தலைஇப் பெயலான் றவிந்த தூங்கிரு ணடுநாண் மின்னுநிமிர்ந் தன்ன கனங்குழை யிமைப்பப் பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள் வரையிழி மயிலி னொல்குவ ளொதுங்கி மிடையூர் பிழியக் கண்டனெ னிவளென வலையல் வாழிவேண் டன்னைநம் படப்பைச் சூருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து தாம்வேண் டுருவி னணங்குமார் வருமே நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் கனவாண்டு மருட்டலு முண்டே யிவடான் சுடரின்று தமியளாய்ப் பனிக்கும் வெருவுர மன்ற மராத்த கூகை குழறினும் நெஞ்சழிந் தரணஞ் சேரு மதன்றலைப் புலிக்கணத் தன்ன நாய்த்தொடர் விட்டு முருகி னன்ன சீற்றத்துக் கடுந்திற
1. கருத்து: நிலவுபோல வெண்மணலும் இருள்போல உப்பங்கழியிடமும் அழகு பெற்றன. ஆனால் இவள் நுதலும் தோளும் பசலையால் அழகு பெற்றன. ஐயோ பாவம்! |