பக்கம் எண் :

களவியல் சூ. 24391

லெந்தையு மில்லா னாக
வஞ்சுவ ளல்லளோ விவளிது செயலே” 1      (அகம்-158)

இது மிடையை ஏறி இழிந்தாளென்றது காரணமாக ஐயுற்ற தாயைக் கனவு மருட்டலும் உண்டென்றது முதலாகப் பொய்யென மாற்றி அணங்கும் வருமென மெய்வழிக் கொடுத்தது. இது சிறைப்புறமாகக் கூறி வரைவுகடாதலின் அதன்பின் வைத்தார்.

“வேங்கை நறுமலர் வெற்பிடையாங் கொய்து
மாந்தளிர் மேனி வியர்ப்பமற்-றாங்கெனைத்தும்
பாய்ந்தருவி யாடினே மாகப் பணிமொழிக்குச்
சேந்தனவாஞ் சேயரிக்கண் டாம்”2      (ஐந்-ஐந்-15)

இதுவும் அது.

அவன் விலங்குறினும்-தன்னானுந் தலைவியானும் இடையீடு படுதலின்றித் தலைவனாற் கூட்டத்திற்கு இடையூறு தோன்றினும்; அது வரைவிடைப் பொருட் பிரிவும், வேந்தற் குற்றுழியும், காவற் பிரிவுமாம்.

(உ-ம்):

“செவ்விய தீவிய சொல்லி யவற்றோடு
பைய முயங்கிய வஞ்ஞான்றவை யெல்லாம்
பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைஇய
வகனகர் கொள்ளா வலர்தளைத் தந்து
பகன்முனி வெஞ்சுர முள்ள லறிந்தேன்
மகனல்லை மன்ற வினி”3      (கலி-19)


1. கருத்து: பக்கம் 324-ல் காண்க.

2. கருத்து: பக்கம் 324-ல் காண்க.

3. கருத்து: இனியன சொல்லி முயங்கிய முதற்புணர்ச்சி நாளில் கூறிய யாவும் பொய் என்பதை யான் எப்படி அறிவேன். ஊராரிடத்து அலர் தூற்றத்தந்து நீ வெஞ்சுரம் போக நினைத்தலை அறிந்தேன். நீ நல்ல மகன் அல்லை.