பக்கம் எண் :

392தொல்காப்பியம்-உரைவளம்

“நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த
பன்மீ னுணங்கல் கவருந் துறைவனைக்
கண்ணினாற் காண வியையுங்கொ லென்றோழி
வண்ணந்தா வென்கந் தொடுத்து”1      (ஐந்-எழு-66)

களம்பெறக் காட்டினும்-காப்பு மிகுதியானுங் காதன் மிகுதியானுந் தமர் வரைவு மறுத்ததினானுந் தலைவி ஆற்றாளாயவழி இஃதெற்றினா னாயிற்றெனச் செவிலி அறிவரைக் கூஉய் அவர் களத்தைப் பெறாநிற்கத் தலைவியை அவர்க்கு வெளிப்படக் காட்டினும்.

களமாவது-கட்டுங் கழங்கும் இட்டுரைக்கும் இடமும் வெறி யாட்டிடமுமாம்.

(உ-ம்)

“பொய்படு பறியாக் கழங்கே மெய்யே
மணிவரைக் கட்சி மடமயி லாலுநம்
மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோ
னாண்டகை விறல்வே ளல்லனிவள்
பூண்டாங் கிளமுலை யணங்கி யோனே” 2      (ஐங்குறு-250)

இது கழங்கு பார்த்துழிக் கூறியது.

“கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி
யறியா வேலன் வெறியெனக் கூறு


1. கருத்து: என் தோழியே! பரதவர் தந்த பன்மீன் வற்றல்களைப் புட்கள் கவரும் கடற்றுறைவனை நம் கண்காண இயையுமோ. கண்டால் அவனை வளைத்து நீ கவர்ந்து சென்ற எம் அழகைத் தா எனக் கேட்பேம்.

2. கருத்து: பொய்ம்மையிற்பட்டு மெய்ம்மையையறியாத கழங்கே; இவளுடைய முலை வருந்தப் புல்லி நட்புற்றவன் மலைச்சாரலில் மயில்கள் ஆடும் வள்ளிக்கொடி நிறைந்த கானத்துக்குரிய ஆண்மகனாவான். செவ்வேள் அல்லன். அறிக.