பக்கம் எண் :

களவியல் சூ. 24393

மதுமனங் கொள்குவை யனையிவள்
புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே” 1      (ஐங்குறு-243)

இது தாயறியாமை கூறி வெறி விலக்கியது.

“அம்ம வாழி தோழி பன்மலர்
நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை
குன்றம் பாடா னாயி
னென்பயஞ் செய்யுமோ வேலற்கு வெறியே” 2      (ஐங்கு-244)

இது தலைவிக்குக் கூறியது.

“நெய் தனறுமலர் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழு மார்ப
னருந்திறற் கடவு ளல்லன்
பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே” 3      (ஐங்-182)

இது வேலற்குக் கூறியது.

“கடவுட் கற்சுனை யடையிறந் தவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தட்
குருதி யொண்பூ வுருகெழக் கட்டிப்
பெருவரை யடுக்கம் பொற்பக் குறமக
ளருவி யின்னியத் தாடு நாடன்
மார்புதர வந்த படர்மலி யருநோய்


1. கருத்து: அன்னாய்! இவள் கண்கள் தனிமையுற்று அழக்காரணம் கடவுளைப் பரவி வெறியாடுவதல்லது வேறு அறியாத வேலனைக் கேட்டு அவன் வெறி எனக் கூறும் இயல்புடையான் ஆகலின் வெறி எடுத்தல் வேண்டும் என்றாக நீ அவன் சொல்வதையே மனத்திற் கொள்ளாநின்றாய். இவள் நோய்க்கு மருந்து வெறியன்று எனத் தெளிக.

2. கருத்து: பக்கம் 325-ல் காண்க.

3. கருத்து: பெருந்துறையில் இவளைக் கூடி வருத்தமுறுவித்தவன் கடவுள் அல்லன். நெய்தல் மலரை செருந்தி மலரோடு விரவித் தொகுக்கப்பட்ட நறிய மாலை மணம் கமழும் மார்புடைய மகனாவான்.