நின்னணங் கன்மை யறிந்து மண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறியிடை வந்தோய் கடவு ளாயினு மாக மடவை மன்ற வாழிய முருகே” 1 (நற்றிணை-34) இது முருகற்குக் கூறியது, “அன்னை தந்த தாகுவ தறிவென் பொன்னகர் வரைப்பிற் கன்னந் தூக்கி முருகென மொழியு மாயி னருவரை நாடன் பெயர்கொலோ வதுவே” 2 (ஐங்குறு-247) இது தமர் கேட்பக் கூறியது. பிறன் வரைவு ஆயினும்-நொதுமலர் வரையக் கருதிய வழித் தலைவி சுற்றத்தார் அவ்வரைவினை ஆராயினும் தோழி தலைவற்குந் தலைவிக்குங் கூறும். (உ-ம்) “கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் கொழுமீன் கொள்பவர் பாக்கங் கல்லென நெடுந்தேர் பண்ணி வரலா னாதே குன்றத் தன்ன குவவுமண னீந்தி வந்தனர் பெயர்வர்கொ றாமே யல்க லிளையரு முதியருங் கிளையுடன் குழீஇக் கோட்சுறா வெறிந்தெனச் சுருங்கிய நாட்பின் முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறுமகள் வலையுந் தூண்டிலும் பற்றிப் பெருங்காற்
1. கருத்து: பக்கம் 326-ல் காண்க. 2. கருத்து: அன்னை வேலனை வெறியாட அழைத்ததும் அவன் சொல்வது இன்னதென்பதும் யான் அறிவேன். அவ்வேலன் இவள் வருத்தத்துக்கு முருகன் காரணம் ஆவான் எனின் அம்முருகு என்னும் பெயர் மலைநாடன் பெயராகுமோ கூறுக. |