றிரையெழு பௌவ முன்னிய கொலைவெஞ் சிறாஅர் பாற்பட் டனளே”1 (நற்றிணை-207) இது நொதுமலர் வரைவு மலிந்தமை தோழி சிறைப்புறமாகக் கூறியது. ‘பாற்பட்டனள்’ எனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறினாள். “இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப் பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கின் கண்ணகன் றூமணி பெறூஉ நாட னறிவுகாழ்க் கொள்ளு மளவைச் செறிதொடி யெம்மில் வருகுவை நீயெனப் பொம்ம லோதிநீவி யோனே” 2 (குறுந்-379) இது தாய் கேட்பத் தோழி தலைவிக்குக் கூறியது. அவன் வரைவு மறுப்பினும்-தலைவி சுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்த வழியும், தோழி அறத்தொடு நிலையாற்கூறும். (உ-ம்). “அலங்குமழை பொழிந்த வகன்க ணருவி யாடுகழை யடுக்கத் திழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாளிவண் மயங்கிதழ் மழைக்கண் கலுழு மன்னாய்” (ஐங்குறு-220) “குன்றக் குறவன் காதன் மடமக ளணிமயி லன்ன வசைநடைக் கொடிச்சியைப்
1. கருத்து: கொழுமீன் கொள்பவர் பாக்கத்தில் நெடிய தேரை அலங்கரித்து வருதலை அமையார் அவர். குன்றம்போலும் உயர் மணலை நீந்தி வந்த அவர் வறிதே பெயர்வர் போலும். இனிப் பரதவர் குறுமகள் வலையும் தூண்டிலும் பற்றிய பரதவச் சிறார்பால் அகப்பட்டொழிந்தாள். என்னே துயர். 2. கருத்து: பக்கம் 332-ல் காண்க. |